மிஸ்டர் கழுகு: உளவுத்துறை ஐ.ஜி. தலை உருண்டது ஏன்?

‘‘ராஜமரியாதை கொடுத்து வரவழைக்கப்படுவதும் அப்படியே அந்தரத்தில் விட்டுவிடுவதும் அ.தி.மு.க ஆட்சியில் வழக்கமானதுதான்” என்ற பீடிகையுடன் வந்த கழுகாரின் வார்த்தைகளை கவனித்தபோது, அவர் உளவுத்துறை ஐ.ஜி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் பற்றித்தான் சொல்லப் போகிறார் எனத் தெரிந்தது.

‘‘ஓர் அரசாங்கம் அதிகாரிகளை மாற்றுவது சாதாரணமான விஷயம்தான். ஆனால், உளவுத்துறை ஐ.ஜி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்​பட்டது சாதாரண விவகாரம் அல்ல. அது காவல் துறை வட்டாரத்தை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையும் சேர்த்துக் கலக்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி உளவுத் துறை ஐ.ஜி-யாகப் பணி அமர்த்தப்பட்டார் டேவிட்சன் தேவாசீர்வாதம். வழங்கப்பட்ட வேகத்தில் பறிக்கவும் பட்டுள்ளது!”

‘‘சொல்லும்!”

‘‘பொதுவாக, ஓர் அமைச்சரோ, அதிகாரியோ மாற்றப்பட்டால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால், டேவிட்சன் மாற்றப்பட்டதுமே அனைவரும் கோரஸாக ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அது, ‘டேவிட்சனின் உறவினர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அதில் டேவிட்சனுக்கும் பங்கு இருக்கிறது. அதனை மேலிடம் தெரிந்து நடவடிக்கை எடுத்துவிட்டது’ என்பதுதான். இது உண்மையா என்று ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘ரியல் எஸ்டேட் செய்வதற்காக போலீஸ் அதிகாரியைத் தூக்க வேண்டுமானால், இந்த டிபார்ட்​மென்டில் எத்தனை பேரைத் தூக்குவது?’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.”

‘‘அது என்ன ரியல் எஸ்டேட் விவகாரம்?”

‘‘சொல்கிறேன். ‘டேவிட்சன் மனைவியின் அண்ணன் ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறார். அவருக்கு டேவிட்சன் மறைமுகமாக உதவிகள் செய்தார், சில அதிகாரிகளை அங்கு மனைகள் வாங்கச் சொல்லி டேவிட்சன் கட்டாயப்படுத்தினார். அது மேலிடத்துக்குத் தெரிந்துவிட்டது’ என்று சொல்கிறார்கள். அவர் செங்குன்றம், புழல் வட்டாரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.”

‘‘டேவிட்சன் உளவுத்துறை அதிகாரியாக ஆனபிறகுதான் இந்த ரியல் எஸ்டேட் ஆரம்பம் ஆனதா?”

‘‘அதையும் விசாரித்தேன். ‘இரண்டு மூன்று தலைமுறைகளாக மனை, வாங்கி விற்கும் தொழிலில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது குடும்பமே நான்கைந்து தலைமுறைகளாக சென்னையில் குடியிருப்​பவர்கள்​தான்’ என்று சொல்லப்​படுகிறது!”

‘‘பல ஆண்டுகளுக்கு முன்பே டேவிட்சன் மீது இது புகாராகச் சொல்லப்பட்டதாக ஞாபகம் இருக்கிறதே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்