“நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக ஏன் அறிவிக்கக் கூடாது?”

இந்திய கம்யூனிஸ்ட் திடீர் கோரிக்கை! - ஏற்குமா மக்கள் நலக் கூட்டணி?

.தி.மு.க-வுக்கு முன்பாகவே மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90-வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு விருதுநகரில் கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கு நடந்தன. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். “நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியதுதான் கூட்டத்தின் ஹைலைட்!

தலைவர்கள் பேச்சின் முக்கிய சாராம்சம் இதுதான்...

 பொதுச்​செயலாளர் சுதாகர் ரெட்டி: “சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் கருத்தைப் பின்பற்றி இருந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட்டுகள் பெற்றிருக்கும். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கம்யூனிஸ்ட்தான் எதிர்க் கட்சி. நாம் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி யிருப்போம். இப்போது நாம் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளோம். மக்கள் மனதில், மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.”

தேசியச் செயலாளர் டி.ராஜா: “பெரியார் கொள்கைகளை திராவிடக் கட்சிகள் பின்பற்றுகின்றனவா? திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடைபாதைக் கோயில்கள் அதிகரித்திருக்கின்றன. சபரிமலை, பழநி மலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திராவிடக் கட்சிகள்  நடத்தும் டி.வி சேனல்களில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் சீரியல்கள்தான் அதிகம். ஒரு சமூக இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி ஆட்சியைப் பிடித்தவர் அறிஞர் அண்ணா. ‘ரூபாய்க்கு ஒரு படி அரிசி நிச்சயம்’ என்பது போன்ற ஏழைகளுக்குச் சாதகமான கொள்கைகளை அரசின் கொள்கைகளாக மாற்றினார். அவர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த கருணாநிதிக்கு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவு இல்லை. அவர்கள் தேய்ந்து போனது அதனால்தான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்