கூட்டணி சேர்க்கும் ஜெயலலிதா!

சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு...

மினிட் புத்தகத்தில் கையெழுத்து வாங்குதல், பொதுச்செயலாளர் ஆனதற்கு ஒப்புதல், ஜெயலலிதாவுக்கு அதிகாரம், ஓ.பன்னீர்செல்வத்தின் வரவு, செலவு கணக்குத் தாக்கல், தீர்மானங்கள், ஜெயலலிதா உரை, அருசுவை உணவு என அ.தி.மு.க-வின் பொதுக்குழுக்கள் அனைத்திலும் அரைக்கப்படும் மாவைத்தான், டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிலும் அரைத்தார்கள். அந்தப் பொதுக்குழுவில் அரங்கேறிய காட்சிகள் இங்கே...

கட்சி வேலைசெய்த பி.ஆர்.ஓ-க்கள்!

அரசை விமர்சித்து செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளைச் சேர்ந்த செய்தியாளர்கள், பொதுக்குழுவுக்கு தடா போட்டிருந்தார்கள். ஆளும் கட்சியின் நிகழ்ச்சிக்காக அரசின் செய்தித் துறையினர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர். அரசின் பணிகளைச் செய்யாமல் தலைமைச் செயலகத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த மொத்த டீமும் பொதுக்குழு நடந்த இடத்தில் மீடியாவை ஒருங்கிணைக்கும் வேலையை சின்ஸியராக செய்தது. பத்திரிகைத் தொடர்பு உதவி இயக்குநர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி கலைநேசன், கள விளம்பர துணை இயக்குநர் செல்வராஜ், இணை இயக்குநர் சிவ சரவணன், இணை இயக்குநர் தானப்பா, உதவி இயக்குநர் தங்கையன் ஆகியோர் தலைமையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் ராமகிருஷ்ணன், ராகுல், பிரபு, மோகன், ரமேஷ், கார்த்தி, அரசு போட்டோகிராபர் என 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கே சுழன்று சுழன்று பணியாற்றினார்கள். உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்தான் மீடியாவினரை அடையாளம் கண்டு உள்ளே அனுப்பினார்கள்.

‘‘கட்சியில் இருந்து லிஸ்ட் கொடுத்திருக்​கிறார்கள். அவர்களை மட்டுமே பொதுக்குழுவுக்கு அனுமதிக்க முடியும்’’ எனக் கறாராக இவர்கள் சொன்னார்கள். அவர்கள் கொடுத்த லிஸ்ட் படியே அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் இதற்கென தனியாக பாஸ் தயாரித்து வைத்திருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்