பெரியோர்களே... தாய்மார்களே! - 51

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ந்தியா விடுதலை பெற்றபோது தமிழகத்தை அதாவது, அன்றைய சென்னை மாகாணத்தை ஓர் இரும்பு மனிதர் ஆட்சி செய்துகொண்டு இருந்தார். அவர் பெயர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டத்தக்க உத்தம மனிதர் ஓமந்தூரார்.

வட இந்தியர்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று ஏனோ தமிழர்களுக்கு இருப்பது இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். பிரிவினையின் அவலத்தை வட இந்தியர்கள் அதிகமாக அனுபவித்ததால், அவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகம் என்று காரணமும் சொல்வார்கள். இது வரலாறு அறியாதவர்கள் பேசும் பேச்சு.

பல லட்சம் பேர் அங்கும் இங்கும் அகதிகளாய் அலைந்து பல்லாயிரம் உயிர்களைப் பறிகொடுத்துச் செய்யப்பட்ட பிரிவினையை முன்யோசனை மூலமாகச் செயல்பட்டு நாட்டுக்குச் சூழ இருந்த பேராபத்தைத் தடுத்தது தமிழகம். அப்படித் தடுத்த தலைவர் ஓமந்தூரார். இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாகப் பிரிந்தபோது, இந்தியாவுக்குள் அதுவும் சென்னைக்கு அருகில் இருந்த ‘ஹைதராபாத் சமஸ்தானம்’, ‘நாங்கள் பாகிஸ்தானுடன் நல்லுறவு வைத்துக்கொண்டுள்ள சுதந்திர நாடு’ என்று அறிவித்துப் பதறவைத்தது. ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல், ‘‘சுதந்திர ஹைதராபாத் அமைந்தால், அது இந்தியாவின் ஒரு புற்றுநோயாய் அமையும்’’ என்று நடுநடுங்கிச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்