“நான் தாமிரபரணி பேசுகிறேன்..!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நீரின் வேர் தேடும் பயணம்!

கண்நீர் கதைகள்...

நெல்லை மாவட்டத்தின் இரட்டை நகரமான திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகியவற்றை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தில் கீழே இருந்து இதோ தாமிரபரணி பேசுகிறது:

‘‘அழகிய மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது உள்ள அரிய மூலிகைக் காடுகளே என் தாயகம். 7 ஆயிரம் அடி உயரத்தின் மீது இருக்கும் பூங்குளம் எனது பிறப்பிடம். மலையின் மீது ஓடி வரும்போது என்னைப் பார்க்க வேண்டுமே! கரைகளாய் மறித்து நிற்கும் மலைகளில் முட்டி, அடர்ந்த வனங்களின் ஊடாகப் பாய்ந்து வரும்போது எனக்கே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மலையில் இருந்து கீழிறங்கி வந்து உங்களை எல்லாம் சந்திக்க நான் மிகுந்த ஆர்வத்துடன் வந்தேன். ஆனால், என் மகிழ்ச்சியைக் குலைத்துவிட்டீர்களே... நியாயமா?

கந்தலாகிப்போன வாழ்க்கை!

பாணதீர்த்தமாக மக்களிடம் முகம் காட்டும்போது ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே கிடையாது. அங்கிருந்து கல்யாண தீர்த்தம் என்ற இடத்தில் அருவியாகக் கொட்டினேன். அங்கேதானே நீங்கள் எல்லோரும் வந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் தீர்த்தம் எடுத்துச் சென்றீர்கள். ‘இந்தத் தண்ணீர் காசி தீர்த்தத்துக்கு நிகரானது’ என்று சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஏற்பட்ட பெருமை எவ்வளவு தெரியுமா? அதே பெருமையுடன் அங்கிருந்து நகர்ந்து அகத்தியர் அருவியாகக் கொட்டி உங்களை ஆனந்தக் குளியலிட வைத்து மகிழ்ச்சிக்கொண்டேன்.

அப்படியே கீழிறங்கி பாபநாசம் சிவன் கோயிலின் பின்புறமாக வந்தபோது என் மீது தோஷங்கள் கழிக்கும் வகையில் துணிகளைக் கொட்டினார்கள். நான் முகம் சுளிக்கும் முதல் இடம் அதுதான். சில மாதங்களுக்கு முன்பு நல்லவர்கள் சிலர் சேர்ந்து அந்த இடத்தைச் சுத்தம் செய்தபோது 500 மீட்டர் தூரத்தில் என்னில் கிடந்த துணிகளின் எடை தெரியுமா உங்களுக்கு? 15 டன். பிளாஸ்டிக் குப்பைகள் தனிக் கணக்கு. இப்போதும் துணிகளைக் கொட்டும் வழக்கம் தொடரத்தானே செய்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்