தமிழுக்கு இழப்பு!

மிழ் வளர்ச்சிக்காக இறுதிமூச்சு வரை பாடுபட்டவர் தமிழண்ணல். இன்று பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ் பயில்பவர்களும் இருப்பதற்கு முயற்சி எடுத்தவர். அவருடைய இழப்பு தமிழுக்கு நேர்ந்த இழப்பாகவே அறிஞர்கள் வருந்துகின்றனர்.

தமிழாய்வு உலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்ற​ தமிழண்ணல் என்று அறியப்படும் முனைவர் இராம.பெரியகருப்பன் டிசம்பர் 29-ம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் ஊரில் பிறந்த அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளி​யலில் இளங்கலை, தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கி, 13 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த பிறகு, மதுரை தியாகராசர் கல்லூரியில் 10 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில், ‘சங்க இலக்கிய மரபுகள்’ என்ற பொருளில் ஆய்வுசெய்து 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவருக்கு ஆய்வு நெறியாளர்களாக இருந்தனர். 1971 முதல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல் துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இவரது பணிக்காலத்தில்தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்