“சாமி மாதிரி நினைச்சு கட்சித் தலைவரை கும்பிடுகின்றனர்...:”

அ.தி.மு.க-வினருக்கு வக்காலத்து வாங்கும் போலீஸார்!

“சாலைகளில் கம்பீரமாக நிற்கின்றன, அம்மாவின் புகழ்பாடும் அ.தி.மு.க பொதுக்குழு பேனர்கள். திடீரென அங்கு வந்த மூன்று பேர் அந்த பேனர்களை கிழித்து எறிகின்றனர். நடைபாதையை, சாலையை மறைத்துக்கொண்டு நிற்கும் பேனரை அப்புறப்படுத்து​கின்றனர். எங்கிருந்தோ ஓடி வரும் அ.தி.மு.க கரைவேட்டி கட்டிய சிலர் அவர்களைத் தடுக்கின்றனர். வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்” இதுதான் அந்த வீடியோவில் இருக்கின்றது. தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது இந்த வீடியோ. வீடியோவில் இருப்பவர்கள் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க பொதுக்குழு பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால், அவற்றை அப்புறப்படுத்தி உள்ளனர். அவர்களைத்தான் அ.தி.மு.க-வினர் தாக்கி உள்ளனர். மேலும் பேனர்களை அகற்றிய அக்தர், ஜெயராமன், சந்திரமோகன் மூவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக வழக்குப் பதிந்து இருக்கிறார்கள். 

 ‘என்ன நடந்தது’ எனஅறப்போர் இயக்கத்தின் பொருளாளர் நக்கீரனிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்