சுத்தம் செய்த தன்னார்வக்குழு... சுற்றிவளைத்த பொதுப்பணித் துறை!

ஸ்டிக்கர் லிஸ்ட்டில் சேலம் ஏரி

‘‘தமிழக அரசால் செய்ய முடியாத ஒரு செயலை, தனி மனித முயற்சியால் ஓர் அமைப்பு சாதித்துக்காட்டியிருக்கிறது. சில ஏரிகளைத் தத்தெடுத்து அவற்றைத் தமிழகத்திலேயே முன்மாதிரியான ஏரிகளாக உருவாக்கி இருக்கிறார்கள் சேலம் மக்கள் குழுவினர். அந்த ஏரிகளை, அரசு கையகப்படுத்தி அம்மாவின் சாதனை லிஸ்ட்டில் சேர்க்கத் துடிக்கிறார் மாவட்ட கலெக்டர் சம்பத்’’ என்று குமுறுகிறார்கள் சேலம் மக்கள்.

சேலம் மக்கள் குழுவின் தலைவர் பியூஸ் மானஸ், ‘‘2010-க்கு முன்பு சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள ‘மூக்கனேரி’ குப்பை, கூளங்கள் நிறைந்தும், கழிவுநீர் தேங்கியும், கோடைக்காலங்களில் வறண்டும் இருந்தது. சீமைக்கருவேல முட்களால் புதர்கள் மண்டி, சமூக விரோதச் செயல்களின் கூடாரமாகக் கிடந்த ஏரியை 2010-ல் சேலம் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் எழுத்துப்பூர்வமாக சேலம் மக்கள் குழு தத்தெடுத்தது.

500-க்கும் மேற்பட்ட எங்களுடைய தன்னார்வலர்கள் ஏரிக்குள் இறங்கி குப்பைகளையும் சீமைக்கருவேல மரங்களையும் அப்புறப்​படுத்தினார்கள். பிறகு ஏரியைத் தூர்​வாரி அந்த மண்ணைக்​கொண்டே ஏரிக்குள் 45 மண் திட்டுகள் அமைத்து அதில், 12 ஆயிரம் மரங்களை நட்டு, ஏரியின் நீர்வழித்தடங்களைச் சீர்படுத்தியதால் ஏரிக்குத் தண்ணீர் வரத் தொடங்கியது. தற்போது தமிழகத்திலேயே முன்மாதிரி ஏரியாக அதை உருவாக்கி இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்