கழுகார் பதில்கள்!

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-32.

 ‘விஜயகாந்த்தை கூட்டணிக்கு தி.மு.க அழைப்பது அவர்கள் பிழைத்துக்கொள்வதற்குத்தான்’ என்று பி.ஜே.பி மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் சொல்லி இருக்கிறாரே?


 விஜயகாந்த் பி.ஜே.பி அணிக்கு வரவேண்டும் என்று முரளிதர் ராவ் அழைப்பது, விஜயகாந்த்தை வாழ வைப்பதற்கா அல்லது பி.ஜே.பி வாழ்வதற்கா?

முதலில் பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர்கள் சென்று விஜயகாந்த்தைப் பார்த்தார்கள். அடுத்து முரளிதர் ராவ் பார்த்தார். இந்தக் கூட்டணியில் இருப்பதாக விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால், இவர்கள்தான் அவர் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இதுபற்றி விஜயகாந்த்திடம் கேட்டபோது, ‘அவங்க சொல்லிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?’ என்றார். ‘எங்கள் கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த்தை மற்ற கூட்டணித் தலைவர்கள் வந்து சந்திப்பது சதி’ என்று அலறுகிறார் இல.கணேசன். இப்படி பி.ஜே.பி தலைவர்கள் அனைவரும் துடிப்பது எதற்காக என்பதை முரளிதர் ராவ்தான் விளக்க வேண்டும்.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

 காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பெண் அரசியல் தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசிவருவது பற்றி?


 பொதுவாக அரசியல் தலைவர்கள் பற்றி விமர்சனம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பெண் அரசியல்வாதிகளாக இருந்தால், கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஜெயலலிதா, தமிழிசை, விஜயதரணி ஆகியவர்கள் பற்றி இளங்கோவன் சொல்லும் விமர்சனங்கள் அவருக்கு மரியாதை சேர்ப்பதாக இல்லை. தைரியமாகப் பேசுவதாக நினைத்துக் கொச்சையாகப் பேசிவிடுகிறார். இது தவறானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்