மிஸ்டர் கழுகு: ஜெ. ப்ளான் மெகா கூட்டணி!

‘‘தேர்தல் சூடு பறக்க ஆரம்பித்துவிட்டது” என்றபடியே வந்து தனது சிறகுகளை சிலிர்த்துக்கொண்டார் கழுகார்!

‘‘அதற்கு முன்னால் நாஞ்சில் சம்பத் மேட்டரைச் சொல்லும்!” என்றோம். சிரித்தபடியே தொடங்கினார்.

‘‘தனக்குத் தரப்பட்ட பதவியைப் பறித்துவிட்டார்கள் என்ற தகவல் வந்ததுமே, நாஞ்சில் சம்பத் சிரித்தாராம். ‘முன்னாலேயே நினைச்சேன்’ என்றாராம். நாஞ்சில் சம்பத், 2012-ம் ஆண்டு டிசம்பரில் அ.தி.மு.க-வுக்கு வந்தார். அப்போதே அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி தரப்பட்டது. உடனடியாக மாவட்டம்தோறும் அனைத்து அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் அவரை அழைத்துச் சென்று பெரிய பெரிய கூட்டங்களை மெகா மாநாடுகள்போல நடத்தினார்கள். அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அதில் சூறாவளியாகச் சுழன்று வந்தார். அதன்பிறகு அவருக்குப் பெரிய அளவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்தபோதும், ஜாமீனில் வந்தபிறகும், தீர்ப்பு வந்தபிறகும் இவருக்கு அதிக அளவில் கூட்டம் ஏற்பாடு செய்யவில்லையாம். இலக்கிய விழாக்கள், கோயில் விழாக்களில் தான் பேசி வந்தார். அவ்வப்போது நடக்கும் அ.தி.மு.க கூட்டத்​திலும் பங்கேற்றார்.

அ.தி.மு.க-வைப் பொறுத்த​வரை அங்கு நான்​கைந்து அமைச்சர்​களை வைத்துத்தான் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள் அல்லது அமைச்சர் பெய​ருக்கு முக்கியத்​துவம் கொடுத்து கூட்டம் போடுவார்கள். இந்த வருத்தங்கள் அவருக்கு இருந்துள்ளது. இந்த நிலையில்தான் அவரிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது!”

‘‘தொலைக்காட்சிகளுக்குக் கொடுத்த பேட்டிகள்தான் காரணம் என்பது உண்மைதானா?”

‘‘டிசம்பர் மாதம் 31-ம் தேதி அ.தி.மு.க பொதுக்​குழுவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த நாஞ்சில் சம்பத், மறுநாள் இரண்டு தனியார் தொலைக்காட்சிகளில் நேருக்கு நேர் பேட்டிகளில் பங்கெடுத்தார். ‘புதிய தலைமுறை’ தொலைக்​காட்சி பேட்டியில், ‘இவ்வளவு மழை வெள்ளம் பாதித்து இத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டது சரியா?’ என்று கேட்கப்பட்டது. ‘ ஏதோ ஓர் இழவு பக்கத்து வீட்டில் நடந்தது என்பதற்காக கல்யாணம் நடத்தாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டார். அவரிடம் கூட்டணி பற்றி கேட்கப்பட்டது. அப்போது அனைத்துக் கட்சிகளையும் சரமாரியாகத் திட்டித் தீர்த்தார். தி.மு.க-வையோ, விஜயகாந்த்தையோ சம்பத் விமர்சிப்பதை தலைமை எதுவும் சொல்லாது. ஆனால் அவரது பேட்டியில் அதிகமாக ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், பி.ஜே.பி., விடுதலைச்​சிறுத்தைகள், பா.ம.க ஆகிய கட்சிகளை திட்டித் தீர்த்தார். இது சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 வரை ஒளிபரப்பு ஆனது. அன்று 7.30-க்கு மறுஒளிபரப்புச் செய்​தார்கள். 8 மணிக்கு நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிக்​கப்​பட்டது. காலையில் இந்த பேட்டி ஒளிபரப்பு ஆனதும் உளவுத்துறை போலீஸார் உஷாராக நோட் போட்டுவிட்டார்கள்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்