வில்லங்க வழியில் விஜயகாந்த்!

தாக்குவதை சகித்துக்கொள்ள முடியாது!

‘‘செய்தியாளர்களா நீங்கள்? ‘த்தூ’...’’ என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பத்திரிகை யாளர்களை அவமதித்தது, பத்திரிகையாளர்கள் இதுவரை எதிர்கொள்ளாத அவமானம். இதற்குமுன் கூட்டத்தோடு கூட்டமாக பத்திரிகையாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது உண்டு. தொலைபேசியில் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன. சிலர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களைத் திட்டுவார்கள். ஆனால், ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் அத்தனை கேமராக்கள் முன்னிலையில் மிகத் தரம்தாழ்ந்த முறையில் விஜயகாந்த் விமர்சித்த முறை, கடும் கண்டனங்களை எழுப்பின. ‘அவர் பத்திரிகையாளர்களை விமர்சிக்கவில்லை. அவர்கள் மூலம் ஜெயலலிதாவின் செயலற்ற அரசாங்கத்தைத்தான் விமர்சித்தார்’ என்று சிலர் கருத்துச் சொன்னார்கள். ‘கருத்துத் தெரிவித்தால் கூட்டணிக்கு வராமல் போய்விடுவாரோ’  என்று நினைத்துத்தானோ என்னவோ, வழக்கமாக உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் அரசியல்வரை கருத்துத் தெரிவிக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி இதில் கருத்துச் சொல்லவில்லை. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனைத் தவிர, மற்றவர்கள் இதைக் கண்டிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்