பெரியோர்களே... தாய்மார்களே! - 52

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், ஓவியம்: டிராட்ஸ்கி மருது

ந்திய சுதந்திரத்துக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அன்றைய சென்னை மாகாணத்து முதலமைச்சரான பிரகாசம், பல தவறுகளுக்கு அடித்தளம் இடுபவராக இருந்தார். அவரை மாற்றுவதற்கு ராஜாஜியும் காமராஜரும் திட்டமிட்டார்கள். அடுத்ததாக யாரைக் கொண்டு வரலாம் என்று யோசித்தார்கள். அவர்கள் மனதில் உதித்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் சத்தியமூர்த்தியை வென்றவர் அவர். இவருக்கே அனைத்துத் தகுதிகளும் இருப்பதாக ராஜாஜியும் காமராஜரும் நினைத்தார்கள். ஓமந்தூராரிடம் இவர்கள் கேட்டார்கள். இருவருமே விக்கித்துப் போகும் அளவுக்கு, முதலமைச்சர் பதவியை மறுத்தார் ஓமந்தூரார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘‘இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது” என்பதுதான்.

ஒருநாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல... மூன்று நாட்கள் அல்ல... மூன்று மாதங்கள் கடந்தும் ஓமந்தூரார் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் கட்டாயப் படுத்தினார்கள். விடவில்லை. இறுதியாக, ‘‘ரமண மகரிஷியிடம் கேட்கிறேன். அவர் ஒப்புதல் அளித்தால் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் ஓமந்தூரார். தீர்ப்பு ரமணரிடம் இருந்தது. அவரும் பல நாட்கள் அமைதியாக இருந்தார். திடீரென அனுமதி தந்தார் ரமணர். அதன் பிறகும் ஓமந்தூரார் யோசித்தார்.

அன்றைய சென்னை மாகாணம் என்பது ஆந்திராவையும் உள்ளடக்கியது. சென்னை சட்டசபையில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் அதிகமாக இருப்பார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னை முதலமைச்சராக ஏற்பார்களா என்ற சந்தேகம் இருந்தது இவருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்