ஓய்வறியா போராளி! - ஏ.பி.பரதன்

தேச நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த, இந்திய இடதுசாரி இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தோழர் ஏ.பி.பரதன், தன் 92-வது வயதில் இயற்கை எய்தினார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 7-ம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட பரதன், ஜனவரி 2-ம் தேதி இறந்தார்.

பங்களாதேஷில், 1924-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தவர், பரதன். அவரது குடும்பம் நாக்பூருக்கு இடம்பெயர்ந்தது. இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பரதன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்தில், பல முறை சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர், சட்டப்படிப்பை முடித்தார். தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்