“அந்தப் பாவி கொலை செஞ்சதுக்கு என்னை அடிக்கிறாங்களே...”

ம.தி.மு.க. நிர்வாகியை கொன்றவரின் சித்தியை காப்பாற்றிய வைகோ!

ம.தி.மு.க நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளியின் தாயிடம் வைகோ கருணை காட்டிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கிறது, சித்துராஜபுரம். பதற்றம் நிறைந்த இந்தக் கிராமத்தை காவல் துறை தீவிர கண்காணிப்பு பகுதியாகவே வைத்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் ம.தி.மு.க ஒன்றியப் பிரதிநிதியாகவும் இருந்தார். டிசம்பர் 28-ம் தேதி இரவு அவரது கடைக்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று, அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. 

படுகொலையைக் கண்டித்து ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ‘கொலையாளிகளைக் கைதுசெய்தால் மட்டுமே உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை வாங்குவோம்’ என உறவினர்களும் கிராமத்தினரும் தெரிவித்ததால், தொடர்ந்து பதற்றம் நிலவியது. இந்தப் படுகொலை குறித்து கோவிந்தராஜின் உறவினர்கள் தெரிவிக்கையில், ‘‘உள்ளாட்சித் தேர்தல் முன் பகை காரணமா, ஒரு தரப்பினர் அப்பாவி ஒருத்தரை கோவிந்தராஜின் கடைக்குப் பக்கத்தில் வெச்சு அடிச்சாங்க. அதை தட்டிக் கேட்ட கோவிந்தராஜ், ‘அப்பாவிகளை அடிக்காதீங்க. அது உங்களுக்கு நல்லதில்ல’ என காட்டமாகப் பேசியிருக்கார். அந்த முன்பகையை மனதில் வைத்திருந்த அந்தக் கும்பல், அவரை வெட்டிச் சாய்த்துவிட்டது’’ என வருத்தப்பட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்