கழுகார் பதில்கள்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

 சமீபத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதியைவிட ஸ்டாலினை எதிர்த்து ஜெயலலிதா குட்டிக்கதைகள் சொல்லி இருக்கிறாரே?


கருணாநிதியின் பலம் ஸ்டாலின்தான் என்பதை ஜெயலலிதா உணர்ந்துவிட்டதன் வெளிப்பாடு இது.

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

 ‘விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்’ என்கிறாரே, ஜெயலலிதா?


 இதுவே விஜயகாந்த்துக்கு கிடைத்த வெற்றிதான். இதுவரை தன்னைப் பற்றிப் பேசாமல் இருந்த ஜெயலலிதாவைப் பேச வைத்துவிட்டார் அல்லவா விஜயகாந்த்.

மேலும், விஜயகாந்த்துக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்தால், காவல் துறையாலும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆளும் கட்சிக்குத்தான் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும். அதனால்தான் முன்கூட்டியே இப்படிச் சொல்லியாக வேண்டிய நிர்பந்தம் ஜெயலலிதாவுக்கு வந்தது.

எஸ்.எம்.சுல்தான், மதுரை-7.

 ‘பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர், சகாயத்தை முதல்வர் வேட்பாளராகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்கள்’ என்று ராமதாஸ் கூறுகிறாரே?


 இதைவிட சகாயத்தை யாரும் அவமானப்படுத்த முடியாது. சகாயத்தை எதிர்ப்பதை முக்கிய வேலையாகப் பார்ப்பவர் தி.மு.க-வில்தான் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். கிரானைட் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், 1996 முதல் 2014 வரையிலான 18 ஆண்டுகால ஆட்சியில் நடந்த கிரானைட் முறைகேடுகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளன. 1996 முதல் 2001, 2006 முதல் 2011 ஆட்சியில் இருந்தது தி.மு.க. அவர்களது செயல்பாடுகளும் தப்பவில்லை. அப்படிப்பட்ட சகாயத்துக்கு தி.மு.க முத்திரை குத்தப்பார்ப்பது எப்படியாவது சகாயத்தைக் கொச்சைப்படுத்தும் அரசியல் தந்திரம் தவிர, வேறு அல்ல.

தனது தகுதியால் எவரும் வளரவேண்டுமே தவிர, அடுத்தவரின் பலவீனத்தால் அல்ல. இது ஆரோக்கியமானது அல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்