மிஸ்டர் கழுகு: “50தான் தரமுடியும்!”

‘‘கட்சிகளுக்குள் கூட்டணிப் பேச்சு​வார்த்தைகள் களைகட்ட ஆரம்பித்து​விட்டன. கடந்த இதழில் அ.தி.மு.க-வின் மூவ் பற்றிச் சொன்னேன். இப்போது தி.மு.க-வின் திட்டங்களைச் சொல்கிறேன்” என்று வாட்ஸ்அப் செய்திருந்த கழுகார், அடுத்த அரைமணி நேரத்தில் ஆஜர் ஆனார்.

‘‘தே.மு.தி.க-வும் காங்கிரஸ் கட்சியும் தி.மு.க கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இரண்டு கட்சிகளுக்கும் வெளிப்படையான அழைப்பை கருணாநிதி கொடுத்துவிட்டார். தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்துவதற்குச் சரியான ஆள் இல்லை என்ற வருத்தம் கருணாநிதிக்கு இருக்கிறது. விஜயகாந்த் என்ன நினைக்கிறார் என்பதைத் தூதுவர்கள் மூலமாக அறிந்து​வைத்துள்ளார் கருணாநிதி. ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று விஜயகாந்த் சொல்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது தனது அரசியலுக்கு ஆபத்தானது என்றும் விஜயகாந்த் நினைக்கிறார். ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமானால், அது தி.மு.க-வுடன் சேர்ந்தால் மட்டும்தான் நடக்கும் என்பதையும் விஜயகாந்த் அறியாதவர் அல்ல. கடைசி வரைக்கும் போக்குக் காட்டிக்​கொண்டே இருந்து இறுதியாக தி.மு.க-வுடன் சேருவதுதான் விஜயகாந்த்தின் திட்டம். இப்போதே போய்விட்டால், முடிந்த வரை தொகு​திகளைக் குறைத்து​விடுவார்கள் என்று விஜயகாந்த் நினைக்கிறார்’ என்கிறார்கள் தி.மு.க-வில்!”

‘‘எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறார்கள்?”

‘‘விஜயகாந்த்தை பி.ஜே.பி தலைவர்கள் சந்தித்துள்ளார்கள். அவர்களிடம் பிடிகொடுத்துப் பேசவில்லை. ஏராளமான நிபந்தனைகளைப் போட்டாராம் விஜயகாந்த். தன்னை முதலமைச்சர் வேட்பாள​ராக அறிவிக்க வேண்டும் என்றும், தன்னை கூட்டணிக் கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். ‘முதலில் கூட்டணி சேருவோம். தேர்தலில் வெற்றி பெறுவோம், அதன்பிறகு முதலமைச்சரைத் தேர்வு செய்வோம். இப்போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தால், பல கட்சிகள் நம் கட்சிக்குள் வராது’ என பி.ஜே.பி சொல்லி இருக்கிறது. ஆனால், அதை விஜயகாந்த் ஏற்கவில்லை.

பி.ஜே.பி தலைவர்களும் அடுத்​தடுத்த கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போய்விட்டார்கள்.”

‘‘மக்கள் நலக் கூட்டணி..?”

‘‘வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய நால்வரும் விஜயகாந்த்தை சந்தித்தார்கள். அன்றும் விஜயகாந்த், அவர்களிடம் உறுதியான எந்த வாக்குறுதியையும் தரவில்லை. ‘பி.ஜே.பி கூப்பிடுறாங்க, தி.மு.க. துணை முதல்வர் தர்றேன்னு சொல்றாங்க. நான் எந்த முடிவும் எடுக்கலை’ என்றுதான் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த். தங்களது கூட்டணியில் உடனடியாகச் சேர்ந்து, போராட்டங்களில் தே.மு.தி.க பங்கேற்க வேண்டும் என்று அழைக்கத்தான் வைகோ உள்ளிட்​டவர்கள் சென்றார்கள். ஆனால், விஜய​காந்த் பிடிகொடுக்​கவில்லை. ‘தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்’ என்றும் சொல்ல​வில்லையாம் அவர். எனவே, விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இந்த நான்கு தலைவர்களுக்கும் இல்லை. ‘இந்த நால்வரில் ஒருவர் தன்னை விமர்சித்து கொடுத்த பேட்டியைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்பதில் விஜயகாந்த் அதிக அக்கறை காட்டினாரே தவிர, அந்தத் தெளிவோடு கூட்டணி பற்றி எந்தப் பதிலும் சொல்லவில்லை’ என்கிறார் மக்கள் நலக் கூட்டணிப் பிரமுகர். இந்தத் தகவல்கள் அனைத்தும் தி.மு.க வட்டாரத்துக்கு வந்துவிட்டது. சீட் பேரத்துக்காக அதிக நாட்களை விஜயகாந்த் நகர்த்துவார் என்று தி.மு.க-வும் நம்புகிறது.”

‘‘விஜயகாந்த் எவ்வளவு எதிர்பார்க்கிறார்?”

‘‘தே.மு.தி.க வட்டாரத்தில் உலவும் தகவல்களின் அடிப்படையில் சொன்னால், 113 தொகுதிகளை விஜயகாந்த் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ‘இன்று நாம்தான் சட்டமன்ற எதிர்க் கட்சி. தி.மு.க-வைவிட அதிக தொகுதிகளில் வென்றோம். அதனால், நமக்கும் தி.மு.க-வுக்கும் சரிசமமான தொகுதிகள் வேண்டும். பீகாரில் வெற்றி சாத்தியமானதற்குக் காரணமே லாலுபிரசாத் இறங்கி வந்ததால்தான். நிதிஷ்குமாரை தனக்கு சரிக்குச் சமமான இடத்தில் உட்கார வைத்துக்கொண்டார். அதனால்தான் வெற்றி கிடைத்​தது. எனவே, தி.மு.க-தான் இறங்கி வரவேண்டும். இறங்கி வந்தால் வெற்றி பெறலாம். ஆட்சியில் அவங்கதான் உட்காரப் போறாங்க. அவங்களுக்குத்தான் அவசியத் தேவை. அதனால அவங்கதான் இறங்கி வரணும்’ என்று சொல்லி வருகிறாராம் விஜயகாந்த்.”

‘‘அது என்ன 113?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்