வட தமிழ்நாட்டில் வில்லங்கம் விதைக்கும் பா.ம.க-வும் தி.மு.க-வும்!

ளும் கட்சியான அ.தி.மு.க-வைவிட எதிர்க் கட்சியான தி.மு.க-வைதான் எதிரிக் கட்சியாக பாவித்து வருகிறது பா.ம.க. அந்தக் கட்சி நடத்தி வரும் தெற்கு, மேற்கு மண்டல மாநாடுகளில் தி.மு.க-வைதான் அதிகம் வறுத்து எடுக்கிறார்கள். பா.ம.க-வின் விமர்சனங்களுக்கு பதில் செல்லாமல் அமைதி காத்துவந்த தி.மு.க-வினர், தற்போது பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 3-ம் தேதி விழுப்புரத்தில் நடந்த பா.ம.க மாநாட்டில் காடுவெட்டி குரு தி.மு.க-வை விமர்சித்துப் பேசிய சில நிமிடங்களில், அதே மாவட்டத்தில் நடந்த தி.மு.க கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பா.ம.க-வுக்குப் பதிலடி கொடுத்தார்.

காடுவெட்டி குருவின் பேச்சில் அரசியல் நாகரிகம் துளியும் இல்லை. ‘‘ஐந்து முறை கருணாநிதியும், மூன்று முறை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதல்வராக இருந்துள்ளார்கள். இவர்கள் முதல்வராக இருந்தபோது தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு பற்றி ஏதாவது பேசியிருப்பார்களா? இன்னும் இந்த நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்துக்கொண்டு, கருணாநிதி தனது மகனை நடிக்க இறக்கி விட்டுவிட்டார். ஸ்டாலின் சைக்கிளில் சென்றார்; ஆட்டோவில் சென்றார்; பேன்ட் போட்டுக் கொண்டு சென்றார்; அது செஞ்சார்; இது செஞ்சார் என்றெல்லாம் டி.வி-யில் காட்டுகிறார்கள். சரி என்ன செஞ்சாருனு பாத்தா விவசாயிகளை சந்திச்சி, ‘என்னமோ செய்றீங்களே, இது என்ன விவசாயமா? இந்த நெல்ல எப்படி விதைப்பீங்க? ஆத்துல ஏன் தண்ணி வரல’ என்றெல்லாம் கேட்கிறார். படித்த பட்டதாரிகளைப் பார்த்து, ‘உங்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கலையா’னு ஆச்சர்யமாக கேட்கிறார். ஒரு மானமுள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருந்திருந்தா, ஸ்டாலின் வந்து இத மாறி கேட்டதுக்கு .............. அடிச்சிருக்கணும். அடிச்சிட்டு, ‘நீங்களும் உங்க அப்பாவும் இவ்வளவு நாளா செவ்வாய்கிரகத்துல இருந்தீங்களா? இப்பதான் தமிழ்நாட்டுக்கு வர்றீங்களா’னு கேட்டிருக்கணும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்