செந்தில்பாலாஜிக்கு எதிராக காய் நகர்த்தும் அ.தி.மு.க-வினர்!

கரூர் கடுகடு

டந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓட்டு கேட்கப்போன இடங்களில் எல்லாம் மக்களால் மறுக்கப்பட்டவர் கரூர் எம்.பி-யும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை. இவரை மக்கள் மீண்டும் முற்றுகையிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கரூர் நகராட்சியின் 16, 22, 23 ஆகிய வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்ட தம்பிதுரை, அங்குள்ள அண்ணாமலை தெரு, ஜவகர் பஜார், நல்லதங்காள் ஓடை உள்ளிட்ட பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிலையில், ஐந்து ரோடு பகுதியில் திடீரென தம்பிதுரையையும், கலெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட  அதிகாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள், ‘‘கரூர் கருப்பாயி கோயில் தெரு இறக்கத்தில் சாக்கடை நீர் தேங்கிக் கிடக்கு. இதனால 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்திருக்கு. இதைச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு போன் செய்தால் எட்டிக்கூட பார்க்கலை. ரோடு குண்டும் குழியுமாக இருக்கு’’ என தங்கள் பகுதி கோரிக்கைகளைச் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள்.

இதேபோல் 22-வது வார்டு பெண்கள் சிலர், ‘‘முன்கூட்டியே அறிவிக்காமல் திடீரென அதிகாரிகளுடன் போட்டாவுக்கு போஸ் கொடுத்துட்டு போறீங்க. நீங்க வருவது எங்களுக்குத் தெரிஞ்சாதானே குறைகளைச் சொல்ல முடியும். 22-வது வார்டு அன்சாரி தெருவில் மார்க்கெட் மீன் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுறாங்க. வீடுகளில் குடியிருக்க முடியலை. அவ்வளவு நாற்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்