“மூப்பனாரை பிரதமர் ஆக்க உதவாதவர்களுடன் கூட்டணி கூடாது...”

த.மா.கா. இளைஞர் அணி செயற்குழுவில் காரசாரம்!

‘எந்தக் கூட்டணிக்குப் போகலாம்’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தனது கட்சியின் இளைஞர் அணி செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டினார்.

கூட்டத்துக்கு த.மா.கா-வின் மாநில இளைஞர் அணித் தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். ‘ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்வழித்தடங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மூத்த தலைவர்களான ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம் ஆகியோர் முதலில் பேசினர்.

பின்னர் அவர்களைக் கிளம்பும்படி வாசன் சொல்லியிருக்கிறார். கூட்டத்தில் இளைஞர்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே என்ன நடந்தது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் அணி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். “சமீபத்திய மழை, வெள்ளத்தால் அ.தி.மு.க அரசு மீது மக்கள் மத்தியில் எந்தளவுக்கு அதிருப்தியும், கோபமும் இருக்கிறது என்று வாசன் கேட்டார். எவ்வளவு பாதிப்பு என்பதற்கு 25 சதவிகிதம், 50 சதவிகிதம், 75 சதவிகிதம் என ஆப்ஷனும் கொடுத்தார். 50 சதவிகிதம், 75 சதவிகிதம் என ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைத் தனியே அழைத்து மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து கேட்டபோது, சென்னை மாவட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்” என்றார் ஒரு நிர்வாகி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்