பெரியோர்களே... தாய்மார்களே! - 53

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்படம் உதவி: த.மணி

‘நல்லகண்ணு நாட்டை ஆளக் கூடாதா?, சங்கரய்யாவுக்கு என்ன குறைச்சல்?, சகாயத்தை முதல்வர் ஆக்குவோம்!, பொன்ராஜ்க்கு அந்தத் தகுதி இல்லையா?’ - அரசியல் எல்லைகளைக் கடந்து சிந்திப்பவர்கள் இப்படி எல்லாம் தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்துல்கலாம் சொன்னது மாதிரி, ‘கனவு காணலாம்’. தவறே இல்லை. யாரையும் தடுக்க முடியாது. எந்தக் கனவும் யதார்த்தத்தோடு பொருந்திப்போக வேண்டும். பொருந்தாக் கனவு கானல்நீரே!

சித்தாந்தங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த கம்யூனிஸ்ட் மேதைகளே, வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை மறுக்க​வில்லை. ஆனால் சமூக மாற்றம், சமூக சீர்திருத்தம், அமைப்பில் திருத்தம் என்பது எந்த ஒரு தனி மனிதனையும் மட்டும் சுற்றி இருக்க முடியாது. ஒரே ஒரு நல்லவன் கையில் ஆட்சி போனால்போதும், நாடே மாறிவிடும் என்பது கற்பனாவாதம்!

முதலமைச்சர் ஓமந்தூரார் நல்லவர்தான். அவரை​விட நல்லவர் இல்லை. நேர்மையாளர் இல்லை. ஆனால், அவரை இரண்டே ஆண்டுகளில் சென்னையைவிட்டே விரட்டிவிட்டார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் சொந்தக் கட்சிக்காரர்களிடமும், கட்சித் தலைமையிடமும், தனது கட்சி
எம்.எல்.ஏ-க்களிடமும் தனக்குக் கீழ் இருந்த அதிகாரி​களிடமும் அவர்பட்ட துன்ப, துயரங்கள்தான் ஒரு நேர்மையாளன் அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாட்சிப் பத்திரங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்