திருச்செங்கோடு மாணவிகள் நீக்கப்பட்டது சரியா?

மது அருந்திய விவகாரம்

ள்ளிக்கூட மாணவ, மாணவிகள் மதுக் குடித்துவிட்டு செய்யும் அட்டகாசங்கள் தொடர்பான செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுவது வாடிக்கையாகிவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த ஒரு மாணவி, தன் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக மது அருந்தும் காட்சி வாட்ஸ்அப்பில் வைரலானது. சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவர், தன் பள்ளித் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். சில வாரங்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் திருச்செங்கோடு அரசுப் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமு, “பள்ளி மாணவர்கள் மது அருந்துவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே, மது போன்ற தீயப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்பு உணர்வு வகுப்புகளை அனைத்துப் பள்ளிகளிலும் நடத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் சில பள்ளிகளில் மனநல மருத்துவர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை. இந்த வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய மனநல மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் மதுபானக் கடைகள் இருக்கவே கூடாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்