குண்டு வீசப்பட்டது தெரிந்தும் செல்லூர் ராஜு உடனே ஏன் வரவில்லை?

அமைச்சர் குடும்பத்தைச் சுற்றும் விசாரணை!

மைதி இழந்து தவிக்கிறது மதுரை. கடந்த வாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வெடி​குண்டுகள் வீசப்பட்டு, அதன் பரபரப்பு அடங்கும் முன்பாகவே, அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகத்திலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் மாவட்ட அலுவகத்திலும் கடந்த சனிக்கிழமை இரவு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.  
    
அமைச்சர் செல்லூர் ராஜுவைத் தொடர்பு​படுத்தி விரும்பத்தகாத பல விவகாரங்கள் பேசப்படும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனே செல்லூர் ராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அப்படியா?’ என்று அலட்டிக்கொள்ளாமல் கேட்டுக் கொண்டாராம். சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக அவர் செல்லவில்லை. மறுநாள் காலையில்தான் போயிருக்கிறார். கடந்த தி.மு.க ஆட்சியில் மு.க.அழகிரி எந்த பாணியில் அரசியல் நடத்தினாரோ, அதே போலத்தான் செல்லூர் ராஜுவும் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க-வினரே சொல்கிறார்கள். தி.மு.க அதிகாரத்தில் இருந்த சமயத்தில் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்ற ஆட்களை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு  ‘அரசியல்’ நடத்தினார் அழகிரி. அதுதான் அவரது சரிவுக்குக் காரணமாக இருந்தது. அதேபோல, அமைச்சர் செல்லூர் ராஜுவும், விவகாரமான ஆட்கள் பலரை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார் என்றும், தற்போது குண்டு வெடிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்