கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

? இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் இவ்வளவு வெளிநாடுகள் சென்றது இல்லை என்ற அளவுக்கு வெளிநாடுகள் போகிறாரே, பிரதமர்?


! சும்மா சும்மா நம்ம நாட்டுக்கு வருகிறாரே என்று அந்த நாடுகளே கவலைப்படாதபோது நமக்கு என்ன கவலை?

ஜெயமங்கலம் ராஜகுமார், பெரியகுளம்.


  எஸ்றா சற்குணம், மதுரை ஆதீனம்..?


  ஆன்மிகத்தைவிட அரசியலில் அதீத ஆர்வம்கொண்டவர்கள். எஸ்றா தி.மு.க மேடைகளுக்கும், ஆதீனம் அ.தி.மு.க மேடைகளுக்கும் நல்ல ‘என்டர்டெய்னர்கள்’. மற்றபடி அவர்கள் சொல்லும் தத்துவங்களுக்கு விளக்கம் சொல்ல நம்மால் முடியாது.

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

  ‘தேர்தல் நெருங்க நெருங்க மாற்றங்கள் ஏற்படும்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது பற்றி..?


 அவர் என்ன மாதிரியான மாற்றத்தைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. பொதுவாகவே தேர்தல் நெருக்கத்தில்தான் மாற்றங்கள் ஏற்படும். ஏற்பட்டும் இருக்கின்றன.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 தமிழக காங்கிரஸ் தலைவர்களை யாராலும் ஒற்றுமைப்படுத்திவிட முடியாதா?


  நரேந்திர மோடி மாதிரியான ஆள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனால், ஈஸியாக ஒற்றுமைப்படுத்திவிடலாம். மொத்தப் பேரும் சப்த நாடி ஒடுங்கிப் போய் அடங்கிவிடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்