மிஸ்டர் கழுகு: ‘ஆறாவது முறை... அதுவே இலக்கு!’ - ‘ஸ்டாலின் அப்புறம்’

‘‘ஆறாவது முறை அதுவே இலக்கு! ஸ்டாலின் அப்புறம்’’ என கவர் ஸ்டோரிக்​கான தலைப்பு, கழுகார் வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது. ஒரு மணி நேரத்தில் லேன்ட் ஆனார் கழுகார். ‘‘15-வது சட்டசபைத் தேர்தல் திருவிழாவில் தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான். ஸ்டாலின் முதல்வர் என்பதை எல்லாம் அப்புறம் பார்ப்போம் என்பதுதான் அறிவாலயத்தின் இப்போதைய டாக்’’ என்றபடியே கவர் ஸ்டோரிக்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் கமிஷன் பயிற்சி வகுப்புகளை எல்லாம் தொடங்கிவிட்டது. பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்​படலாம். கட்சிகளும் கூட்டணி மூவ்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டன. 1989-க்குப் பிறகு அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. அந்தக் ‘கணக்கு’ படி இந்தத் தேர்தலில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என தி.மு.க நம்புகிறது. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகக் காய்களை தி.மு.க. நகர்த்தி வருகிறது

‘முடியட்டும் விடியட்டும்’, ‘நமக்கு நாமே’ என ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்தல் பயணத்தைத் தொடங்கிவிட்டது தி.மு.க. தி.மு.க-வின் அடுத்த வாரிசு என வர்ணிக்கப்படும் ஸ்டாலின்தான் இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என பேச்சுகள் அலையடிக்க ஆரம்பித்தன. மிசாவுக்கு முன்பிருந்து அரசியலில் இருக்கும் ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி இன்னும் வாய்க்கவில்லை. முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்துகூட கிடைக்க​வில்லை.  இப்படிப்பட்ட சூழலில் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட ஸ்டாலினை கருணாநிதியும் பாராட்ட ஆரம்பித்தார். ‘நமக்கு நாமே’ பயணத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது’ என சொன்னார் கருணாநிதி. ஏன் ஜெயலலிதாவே ‘நமக்கு நாமே’ திட்டத்தைப் பற்றி பொதுக்குழுவில் விமர்சித்துப் பேசினார். இதெல்லாம் சேர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என செய்திகள் றெக்கை கட்டின. ஆனால், இப்போது ரூட் மாறிவிட்டது. ‘ஆறாவது முறையாக கருணாநிதியே முதல்வர் ஆவார்’ என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.’’

‘‘என்ன காரணமாம்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்