பெரியோர்களே... தாய்மார்களே! - 54

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், படம் உதவி: த.மணி

நான்கரை ஆண்டு காலம் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றன. நாட்டை ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனை என்ன?

திருவிழாக் கோலத்துடன் திருவான்மியூரில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால்...

‘‘இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையிலான அரசு, நாடே வியந்து போற்றும் வண்ணம் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறது.

அதன் முத்தாய்ப்பாக, ‘‘அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் திட்டம், அம்மா சிமென்ட், அம்மா திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் விலையில்லா மடிக் கணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள், தமிழ்நாட்டில் பல இடங்களில் புதிய மருத்துவ, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், திருத்தி அமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பொது விநியோகத் திட்டத்தில் விலையில்லா அரிசி, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்குதல், செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் புதிய ஆலை, அரசு சிமென்ட் ஆலை விரிவாக்கம் புதிய மின் திட்டங்கள், அனைத்து மதத்தினரும் அவரவர் புனிதத் தலங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள நிதியுதவி, கிராமப்புற ஏழை எளிய பெண்கள் பொருளாதார வலிமை பெறும் வகையில் கறவை மாடு, வெள்ளாடு வழங்குதல் உள்ளிட்ட மக்களின் இதயங்கள் மகிழும் வண்ணம் முன்னோடித் திட்டங்கள் பலவற்றை முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. இத்தகைய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் செல்கின்றனர்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்