சென்னைப் புத்தகத் திருவிழா!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொங்கல் புத்தகத் திருவிழா ஜனவரி 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி, வெளி​மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாசகர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். ஆனால், கடந்த மாதம் கன மழை, வெள்ளத்தால் சுமார் 25 லட்சம் புத்தகங்கள் நாசமாகின. அதனால், பதிப்பாளர்கள் பலர் கடுமை​யாகப் பாதிக்கப்பட்டுள்​ளனர். எனவே, சென்னைப் புத்தகக் காட்சியை வரும் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்க முடிவு செய்தனர்.

ஆனாலும், வழக்கமாக நடைபெறும் அதே பொங்கல் திருநாள் காலத்தில், இந்த ஆண்டும் புத்தகக் காட்சியை நடத்த ‘தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்’ ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஜனவரி 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக்​காட்சி நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்