“பாரம்பர்யப் பெருமைகளை விட்டுக்கொடுக்க முடியாது...”

ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டிய பொன்னார்!

‘‘அன்றே சொன்னார் எங்கள் பொன்னார், இன்று மக்கள் மனதில் நின்னார்’’ என்று சமூக ஊடகங்களில் பாராட்டி மகிழ்கிறார்கள்.

பி.ஜே.பி-யினர் மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டுப் பிரியர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பாராட்டுகிறார்கள். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிராவயல், கண்டிப்பட்டி உட்பட தமிழகத்தின் ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலும் பட்டாசு வெடித்து ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை மத்திய அரசு விலக்குமா என்று கவலையோடும், சஸ்பென்ஸோடும் இருந்த தமிழக மக்களுக்கு, இது சர்க்கரைப் பொங்கல்.

டெல்லியில் பிஸியாக​ இருந்த பொன்னாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசினோம்.

‘‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி திடீரென்று அறிவிக்க என்ன காரணம்?’’

‘‘தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவை நீக்க, அது பற்றிய சாதக பாதகங்களை ஆராய்ந்து இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்