‘தலைநகரம்’ பிரகாஷ் ராஜ் ஸ்டைலில்...

வாலாட்டிய போலீஸுக்கு ஆப்புவைத்த வாட்ஸ்அப்

‘தலைநகரம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், புதிய இடத்துக்கு மாற்றலாகி வருவார். வந்தவுடனே அந்த ஏரியாவில் உள்ள ரவுடிகளின் பட்டியலை எடுத்து, யார் யார் எவ்வளவு மாமூல் கொடுப்பார்கள் என்று போலீஸாரிடம் விசாரிப்பார். இதேபோன்ற காட்சி நிஜத்திலும் அரங்கேறி இருக்கிறது. உளுந்தூர்பேட்டையில் இருந்து திருவண்ணா​மலைக்கு மாற்றலாகி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, ட்யூட்டியில் சேர்ந்த உடனே செய்த முதல் விஷயம், அங்குள்ள ரவுடிகளின் பட்டியலை எடுத்து வசூல் வேட்டையை ஆரம்பித்ததுதான் என்கிறது போலீஸ் வட்டாரம்.

அதுமட்டுமல்ல, ரவுடிகள் பட்டியலில் இருக்கும் ஒருவரை கைது செய்யாமல் தப்ப வைப்பதற்கு, வக்கீல் ஒருவருடன்  இன்ஸ்பெக்டர் பழனி நடத்திய பேரம் தொடர்பான ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி காவல் துறையை இப்போது கலங்கடித்து வருகிறது.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “உளுந்தூர்பேட்டையில் வக்கீல் சரண்ராஜை தாக்கிய வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டர் பழனி, சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு, துரிதமாக ச் செயல்பட்டு சில குற்றவாளிகளை கைது செய்தார். இதனால் பழனியிடம் சில முக்கிய வழக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகள், கொலைக் குற்றவாளிகள், கட்டப் பஞ்சாயத்து ஆசாமிகள், மண் கடத்தல்காரர்கள் ஆகியோரின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தனக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ஒவ்வொருவரிடமும், 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளார். அவருக்கு எதிராக எஸ்.பி-க்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் போயின. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்