சிக்கலில் மாறன், சிதம்பரம் குடும்பம்!

சூடுபிடிக்கும் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம்!

ர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் சி.பி.ஐயைத் தொடர்ந்து, மத்திய அமலாக்கத் துறையும் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துவிட்டது. இதுவரை மாறன் சகோதரர்கள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்த இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தையும் சிக்கலில் இழுத்துவிட்டுள்ளது இந்தப் புதிய குற்றப்பத்திரிகை.

ஏர்செல் - மேக்ஸிஸ் ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2ஜி வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓ.பி.சைனிதான் இந்த வழக்கையும் விசாரித்து வருகிறார். இது தொடர்பாக சி.பி.ஐ தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில், ‘‘சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்தியாவில் செல்போன்களின் பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, தனது செல்போன் சேவை நிறுவனத்தை விரிவாக்க நினைத்த சிவசங்கரன், 14 சர்க்கிள்களில் ஏர்செல் நிறுவனம் செயல்படுவதற்கான அனுமதி கேட்டு மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பித்தார். 2005-ம் ஆண்டு அவர் கொடுத்த விண்ணப்பத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் விதவிதமான காரணத்தைச் சொல்லி அவருடைய விண்ணப்பத்தை மத்தியத் தொலைத் தொடர்புத் துறை நிராகரித்தது. அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்