வேலைவாய்ப்புக்கா? தேர்தலுக்கா?

ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகரைவிட பிரமாண்டம்!

முதல்வர் ஜெயலலிதா படங்கள், இரட்டை இலை சின்னம் பொறித்த பேனர்கள், கட்சிக் கொடிகள் என அ.தி.மு.க மாநாடு போல, கோவையில் தமிழக அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. வேலைவாய்ப்பு முகாமா, இல்லை சட்டமன்ற தேர்தல் முகாமா என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முகாமை நடத்தி முடித்திருக்கின்றனர் அதிகாரிகள்.

ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கத்தை விட பிரமாண்டம்’

ஸ்ரீரங்கத்தில், 2011-ல்  பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது அரசு. 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரிலும் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதுதவிர சில மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்திருந்தாலும், அவையெல்லாம் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகரைப்போல  நடக்கவில்லை. ஆனால், இந்த முகாம்களை விட தனது தொகுதியில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

பல்லாயிரம் போஸ்டர்கள், 500-க்கும் அதிகமான ஃப்ளெக்ஸ் போர்டுகள், அனைத்து அரசு பேருந்துகளிலும் ஜெயலலிதா படத்துடன் விளம்பரங்கள், வழியெங்கும் அ.தி.மு.க கொடிகள், மிகப்பிரமாண்ட முகப்பு என கோவையில்  மாநாடு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ‘ஜாப்’ மேளா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்