என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

‘சக்கரை மூட்டை இருக்கா?’, ‘சக்கரை மூட்டை இருக்கா?’ என்று கூவியவாறு சர்க்கரை மூட்டைகளை வாங்கிக் கொண்டிருந்தவர்... பங்காளியோடு வாய்க்கால் வரப்புச்சண்டையில் ஈடுபட்டு, இருவரைக் கொலைசெய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தவர்... காவல் துறைக்குப் பயந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்... அது எல்லாம் ஒரு காலம். இன்றைக்கு, போலீஸ் பாதுகாப்போடு, சிவப்பு விளக்குச் சுழலும் சொகுசுக் காரில் வலம் வருகிறார். அவர்தான், தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி. எம்.எல்.ஏ-வாக அவர் தேர்வுசெய்யப்பட்டது, சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதி. ஒரு நகராட்சி (எடப்பாடி), ஐந்து பேரூராட்சிகள் (கொங்கணாபுரம், பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி), மற்றும் 29 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் உள்ளன. மொத்த மக்கள்தொகை மூன்றரை லட்சம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்