பெரியோர்களே... தாய்மார்களே! - 55

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

காரைக்குடி வள்ளல் அழகப்பர், திருச்சூரில் ஒரு நூற்பாலை திறக்க இருந்தார். அதை, நீங்கள் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று ஒரு  தலைவருக்குக் கடிதம் எழுதினார். “நான்தான் இப்போது எந்தப் பதவியிலும் இல்லையே... என்னை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று விளக்கம் கேட்டு அந்தத் தலைவர் பதில் கடிதம் போட்டார்.

அதற்கு வள்ளல் அழகப்பர் அனுப்பிய கடிதத்தில், ‘‘கறைபடாத கரம் என்பார்களே! அத்தகைய திருக்கரம் கொண்ட ஒருவரால்தான் இந்த நூற்பாலையைத் திறக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது என் மனதில் தோன்றியது உங்கள் முகம்தான்” என்று குறிப்பிட்டார்.

கறை படியாத கரமும், கள்ளம் இல்லாத முகமும் கொண்ட பி.எஸ்.குமாரசாமி ராஜா தான், ஓமந்தூராருக்குப் பிறகு சென்னை மாகாண முதலமைச்சராக ஆனவர்.

“நான் பதவி விலகச் சம்மதிக்கிறேன். என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வர வேண்டும்” என்று ஓமந்தூரார் சொல்லி... அடையாளம் காட்டப்பட்டவர் தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவுத் துறை ஏட்டில், ‘அச்சம் ஊட்டும் நகரம்’ என்று அழைக்கப்படுவது ராஜபாளையம். பழைய பாளையம், புதுப்பாளையம் என்று இருந்த இரண்டு கிராமங்கள் இணைந்து ராஜபாளையம் நகரம் ஆனது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தெருவெங்கும் தேசிய எழுச்சி இருந்ததால் இந்த ஊருக்கு, ‘சுயராஜ்ய பாளையம்’ என்று பட்டம் சூட்டினார் எஸ்.சீனிவாச ஐயங்கார். பாளையம் என்றாலே படைவீரர்கள் தங்கும் இடம் என்று பொருள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்