பாதுகாப்பு இல்லாத பழனி கோயில்!

தற்கொலை ஏற்படுத்தும் திகில்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில். மார்கழி மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பாதயாத்திரை, காவடி என பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், மலைக்கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் பக்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், புதுப்பட்டினம் தில்லை நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழனி கோயிலுக்கு மாலை அணிந்து வருவதை வழக்கமாகக்கொண்டவர். அதன்படி, கடந்த சனிக்கிழமை பழனி செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வந்தவர், ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தின் விளக்குத்தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்​பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள் பழனிவாசிகள்.

இதுகுறித்து நம்மிடம் பழனி மலைக்கோயில் பாதுகாப்புப் பேரவை​யைச் சேர்ந்த செந்தில்குமார், ‘‘கோயில்ல பராமரிப்புப் பணி நடந்துகிட்டு இருக்கு. ராஜகோபுரத்துக்கு முன்பாக மேற்குப் பகுதியில இருக்கற மண்டபத்தில எலெக்ட்ரிகல் வேலை நடந்துகிட்டு இருந்தது. பொதுவா இந்த மண்டபத்துக்கு யாரும் போக முடியாது. பராமரிப்புப் பணிக்காக அங்க ஒரு ஏணி வெச்சிருந்திருக்காங்க. இரவு வேலை பாத்தவங்க ஏணியை எடுக்காமவிட்டுட்டாங்க. அந்த ஏணியில ஏறி அங்க இருந்த லைட் போஸ்ட்ல தொங்கிட்டாரு போல. குறிப்பா, அந்த இடத்து வரைக்கும் பப்ளிக் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. ஆனா, பராமரிப்பு பணி செய்றவங்கன்னு நினைச்சுவிட்டுருக்காங்க. பழனி கோயில்ல பாதுகாப்பு ரொம்ப கேள்விக்குறியா இருக்கு. யார் யாரோ கோயிலுக்குள்ள பணியாளர்னு சொல்லிட்டுச் சுத்துறாங்க. இங்க உள்ள ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முறையான அடையாள அட்டை இல்லை. அதை யாரும் செக் பண்றதுமில்லை. இதை முறைப்படுத்தணும். சனிக்கிழமை நிறைஞ்ச அமாவாசை அன்னிக்கு சம்பவம் நடந்திருக்கு. பழனிகோயில்ல நடந்த இந்த மரணம் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. இந்த கோவில்ல நடக்கற நல்லது கெட்டது அனைத்தும் ஆட்சியில மாற்றத்தை ஏற்படுத்தும். இதைக் கவனத்துல எடுத்துக்கிட்டு தேவையான பரிகாரங்களை செய்யணும். பழனிக்கு முறையா கும்பாபிஷேகம் நடந்து 16 வருஷம் ஆச்சு.  2006-ல் நடந்தது எல்லாம் ஏத்துக்க முடியாது. அது, ஜெயலலிதாவுக்காக நடந்தது. உடனடியா கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு பண்ணணும். சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் உடனே கோயிலுக்குப் போயிட்டோம். உடனடியா அதிகாரிகள் அனைத்துக் கதவுகளையும் மூடிட்டாங்க. சம்ரோஷணம்ங்கிற பூஜையை உடனடியா செஞ்சாங்க. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அந்தப் பூஜை நடந்தது. பூஜை முடிஞ்சதும் பூஜையில வெச்சு பூஜிச்ச தீர்த்ததை சாமி மேல அபிஷேகம் செஞ்சி, அதுக்கு பிறகுதான் கோவில் திறந்தாங்க’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்