ஜல்லிக்கட்டை தடை செய்யக்காரணம் நாட்டு மாடுகளை அழிக்கத்தான்!

‘காங்கேயம்’ சேனாபதி சொல்கிறார்!

ல்லிக்கட்டு தான் இந்தப் பொங்கலில் கொதிக்கும் விவகாரம்!

‘‘பெரும்பாலானவர்கள் ஜல்லிக் கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்க, மிருக வதை நலச்சங்கம் என்கிற பெயரில் வெளிநாட்டு நிதி உதவிபெறும் சில அமைப்புக்கள்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கிறார்கள்’’ என்கிறார் நாட்டு இன கால்நடைகளைக் காப்பாற்றும் விதமாக இயங்கிவரும் ‘சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய’த்தின் அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி.

ஈரோடு அருகே குட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது பண்ணையில் கருந்திமில் காட்டி நின்ற பெருங்காளை ஒன்றைக் கைகளால் நீவிக்கொடுத்தபடி பேசினார் சிவசேனாபதி.

‘‘மனிதனுக்கும் கால்நடைக்கும் 7,000-ம் வருட பந்தம் உள்ளது. சிந்துச் சமவெளி, மெசபடோமியா, சீனா, மெக்ஸிகோ ஆகிய உலகின் முக்கிய நாகரிகங்களில் கால்நடைகளின் பங்களிப்பு அபரி மிதமானது. நாடோடிகளாக இருந்த மனிதன் குழுக்களாகப் பிரிந்து நிரந்தமாக குடியமர்ந்தபோது, வாழ்க்கைத் தேவைக்கான மாற்றத்தை விலங்குகள் மூலம் ஏற்படுத்தினான். அதில் நாய், மாடு, பூனை, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளை தன் தேவைக்குப் பயன்படுத்தினான். நமது வாழ்க்கை யோடு விலங்குகள் பிணைகின்றன. அதில் உருவானது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்