கோயில் யானைகள் முகாமில் புகுந்த காட்டு யானை!

பயத்தில் பாகன்கள்

.தி.மு.க ஆட்சி என்றால் கட்டாயம் இடம்பிடித்து விடக்கூடியது யானைகள் சிறப்பு நல்வாழ்வு மற்றும் புத்துணர்வு முகாம். வழக்கமாக டிசம்பரில் தொடங்கி, ஜனவரியில் நிறைவுபெறும் இந்த முகாம், சென்னை பெரு வெள்ளம் காரணமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு யானைகள் முகாம் நடக்காது என அதிகாரிகளால் சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென யானைகள் முகாமை ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

முன்பெல்லாம் முழுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் முகாமை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அவசரக் கோலத்தில் தொடங்கியதால், முகாம் ஆரம்பித்த நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை. இதன் விளைவு... இதுவரை நடக்காத ஒரு நிகழ்வாக காட்டு யானை ஒன்று முகாமுக்குள் நுழைந்து கலவரப்படுத்திவிட்டது. கடந்த 7-ம் தேதி, முகாம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, பவானி ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஷவரில் யானைகள் குளியல் போட்டுக்கொண்டிருந்தன. அப்போது நான்கு காட்டு யானைகள் ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தன. அதில் ஆண் யானை ஒன்று, திடீரென முகாமை நோக்கி ஓடிவர... அதைக் கண்ட கோயில் யானைகளும் பாகன்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்