வதைமுகாம்களல்ல வாடிவாசல்!

நுனி நாக்கு ஆங்கிலத்தில்

வென்குழம்பு பூசி

தேகம் வெளுக்க வெள்ளைக்காரர்களாகிவிட்ட

ஹோலிப்பொடி நுகர் வடநாசிக்காரர்களே…

காளைச் சாமிகள்

திமிலதிர ஊசிக் கொம்பு நுழைத்து

செம்மண் புழுதி கிளருகையில் வெளிவரும்

எம் பண்பாட்டு வாசத்தினை

உமது நாசி நுகர வழியில்லை!

ஏனெனில்,

தழுவுதலுக்கும்

அடக்குதலுக்குமான

நுண்ணிய நேயமிகு

நனி சிறந்த வேறுபாடறிந்த

எம் நதிக்கரை

நாகரிகமறியாதவர் நீங்கள்!

கரன்சிக் காடுகளில்

பணப் பார்த்தீனியத்தை

பதியம் போட மட்டும் தெரிந்த உங்களுக்கு

சல்லிக்கட்டற்ற நாட்களில்

வாடிவாசலின் வாசலில்

கன்றுக்குட்டிகளுக்கு

உண்ணிப் பிடுங்கும்

எங்களின் காருண்யம் தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்