கடத்திச் சென்று சித்ரவதை செய்தார்கள்!

நாடகம் ஆடுகிறாரா மாணவி?

“ஸ்பிரே-யால் முகத்தில் மயக்க மருந்தை அடித்து என்னைக் கடத்தினர். என்னைப்போல 18 பள்ளிக் குழந்தைகளை கடத்தி வைத்திருந்தனர். நான் அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்துவிட்டேன்” என்று போலீஸாரிடம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி அஞ்சு அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது நாடகம் என்று விசாரணையில் தெரியவந்ததாகச் சொல்லி  போலீஸார் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறார்கள். 

ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சுவிடம் பேசினோம்.

“10-வதுல ஃபெயில் ஆனதால ஜெயங்கொண்டத்​தில் ஒரு  டுடோரியலில் படிச்சிகிட்டு இருக்கேன். டிசம்பர் 26-ம் தேதி நான் வகுப்புக்குப் போயிட்டு வந்துகொண்டிருந்தப்போ, கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்,  கறுப்புகலர் டாடா சுமோவில் வந்து என்னிடம், ‘பாப்பா... நீ கொடுக்கூர் கோபாலகிருஷ்ணன் மகள்தானே’னு கேட்டார். ‘ஆமாண்ணே’னு சொன்னேன். ‘வாம்மா நான் உங்க வீட்டு வழியாதான் போகிறேன். உன்னை வீட்டில் விட்டுட்டுப் போறேன்’னு சொன்னார். ‘இல்லண்ணா நான் வரமாட்டேன்’ என்று சொன்னேன். அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ஸ்பிரேவை என் முகத்தில் அடிச்சார். அங்கேயே மயங்கிட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தப்போ, பாழடைந்த வீட்டில் கை, கால், வாய் எல்லாம் கட்டப்பட்ட நிலையில் கிடந்தேன். அங்கே, ஸ்கூல் டிரஸ்ல 18 பெண் குழந்தைகள் இருந்தார்கள். எல்லோருமே கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்தோம். அந்த வீட்டில் இருந்த ஒன்பது பேர்ல சீனிவாசனை தவிர மற்றவர்களை எனக்குத் தெரியாது. அவர்கள் பீடி குடித்துவிட்டு, நெருப்பை நளினி என்ற பெண்ணின் தொடையில் சுட்டார்கள். என்னை தொடையில் அடித்தார்கள். அவர்கள் அடித்த காயம்கூட இன்னும் மறையவில்லை” என்று காயத்தைக் காட்டிவிட்டு அழுது​கொண்டே சொன்னார்.

தொடர்ந்து அவர், “எங்களை அவர்கள் சித்ரவதை செய்தார்கள். கடந்த 13-ம் தேதி வெள்ளை நிற சுமோவில் ஆர்.எஸ்.மாத்தூர் என்ற இடத்துக்கு அருகே செல்லும்போது காரை நிப்பாட்டி டீ குடிக்கச் சென்றார்கள். அப்போது, நளினி என்ற பெண் அவளது பல்லால் என் கையில் கட்டிய கயிரை அவித்து, ‘நீ தப்பிச்சி போய் போலீஸ்ல சொல்லி, எங்களை காப்பாற்று’ என்று சொன்னாள். நான் காரில் இருந்து இறங்கித் தப்பிச்சி ஓடினேன். என்னைத் துரத்தி வந்தார்கள். செந்துறை சாலையில் எனது அத்தை நடந்து வந்தார். அவரை நோக்கி நான் சென்றதும், காரில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். போலீஸ்ல சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டேன். இரண்டு நாட்களாக உடம்பெல்லாம் ஒரே வலி. எது சாப்பிட்டலும் வாந்தி எடுத்துடுவேன். எங்கள் வீட்டில் பயந்துபோய், ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்த்தனர். 18 பெண்களையும் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

18 பெண்களை கடத்தி வைத்துள்ளார்கள் என்றால், மிகப் பெரிய கும்பலாகத்தான் அது இருக்க முடியும் என்று நினைத்தபடி போலீஸைச் சந்தித்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்