பெரியோர்களே... தாய்மார்களே! - 56

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

செத்துப்போன பிறகும் பதவி தேவைப் படுகிறது. அதனால்தான் ‘வைகுந்த பதவி அடைந்தார்’ என்று பொய் சொல்லி ஏமாற்றிப் போற்றுகிறோம். தகுதி இல்லாதவர்கள்தான் ஏதாவது பதவி கிடைக்காதா என்று ஏங்கியும் கிடைத்த எல்லாப் பதவிகளையும் விடாமல் வைத்துக்கொண்டும், வலுக்கட்டாயமாகப் பறிக்கும் படியும் நடந்து கொள்வார்கள். ஆனால், தகுதியால் நிறைந்தவர்கள் பதவி வருவதை, தன் மேல் மா இலை படுவதைப்போலவும் பதவி விலகுவதை மா இலை கீழே விழுவதைப்போலவும் மிகச் சாதாரணமாக நினைப்பார்கள்.

பிரகாசம் ஆட்சியில் விவசாய அமைச்சராக இருந்து பதவியைத் தூக்கி எறிந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு, 1949-ல் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

ஓமந்தூராருக்கு அடுத்து யார் சென்னை மாகாண முதலமைச்சர் என்ற போட்டியும், பொறாமையும் கலந்த அரசியல் அந்தக் காலத்திலேயே நடந்தது. பக்தவத்சலத்தை முதல்வர் ஆக்கலாம் என்று காமராஜர் நினைத்தார். ‘தினசரி’ ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும், சி.சுப்பிரமணியமும் காமராஜரைச் சந்தித்து, ‘‘ஏன்? பி.எஸ்.குமாரசாமி ராஜாவை முதல்வர் ஆக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். ‘‘அவர் விரும்பமாட்டாரே! ஏத்துக்கிட்டா பார்க்கலாம்” என்றார் காமராஜர். டாக்டர் சுப்பராயனை நிறுத்த சில ஜமீன்தார்கள், மடாதிபதிகள் முயற்சித்தார்கள். இவருக்கு ராஜாஜியின் ஆதரவும் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்