“டோல்கேட் அடாவடி... வலைவீசும் விபச்சாரக் கும்பல்!”

குமரியில் தவித்த கோவை தம்பதியினர்

குமரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத மாவட்டமாக மாறிவருகிறது எனும் குற்றச்சாட்டை சுற்றுலா வந்த ஒரு தம்பதி முன்வைத்திருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள வட மதுரையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜான், அவரது மனைவி கிளாரா ஜாய்ஸ் ஆகிய இருவரும் கடந்த 15-ம் தேதி கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா வந்தனர். அங்கு நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார், பிரான்சிஸ் ஜான்.

“15-ம் தேதி இரவு 12.15-க்கு கன்னியாகுமரி டோல்கேட்டுல 100 ரூபாய் நுழைவுக்கட்டணம் கொடுத்தோம். ரசீது கொடுக்கல. அங்க இருந்தவங்க குடிச்சிட்டு இருந்ததால, நாங்க இறங்கிக் கேட்காமல் போயிட்டோம். மறுநாள் சுற்றிப் பார்க்கப் போகும்போது வேறோர் இடத்துல 60 ரூபாய் கேட்டாங்க. ‘நாங்க ஏற்கெனவே 100 ரூபாய் கொடுத்துட் டோமே. இப்போ எதுக்குப் பணம்’ என்று கேட்டதும், வாக்கு வாதம் ஆயிருச்சு. கட்டணம் வசூலிப்பவர்கள், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி எங்களை மிரட்டினாங்க. ‘உங்கள் மீது கலெக்டரிடம் புகார் செய்வோம்’ என்று சொன்னோம். ‘இது எல்லாமே கலெக்டருக்குத் தெரிஞ்சுதான் நடக்குது’ என்று சொல்லி திட்டியபடியே எங்களை விரட்டினர். பிறகு, எங்கள் காரை உருட்டுக்கட்டையால தாக்கியதில் கார் சேதம் அடைந்தது. உடனே போலீஸ் கன்ட்ரோல் ரூம் நம்பர் 100-க்கு போன் செஞ்சோம். ஆனா, எடுக்கல. பிறகு நாங்க கன்னியாகுமரி சாலையில் போய்க்கிட்டு இருந்தப்போ இன்னொரு பிரச்னை. என்னை ஒரு விபச்சாரக் கும்பல் ஆசை வார்த்தை கூறி இழுத்தது. அவர்களை விரட்டிவிட்டுச் சென்றுவிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்