சாதிய வன்மத்தின் கொடூரக் கரங்கள்!

தலித் மாணவரின் மரணம் எழுப்பும் கேள்விகள்

றிவார்ந்த சமூகம் உருவாக அடித்தளமிடும் பல்கலைக்கழகங்களிலும்கூட, சாதி தன் கோரப் பற்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த ஒரு மாணவரின் உயிரைக்குடித்திருக்கிறது சாதிய வன்மம்.

வாட்ச்மேன் வேலை பார்க்கும் தந்தைக்கும், தையல் தொழிலாளியான தாய்க்கும் மகனாகப் பிறந்தவர் ரோஹித் வெமுலா. மிகவும் அடித்தட்டு சமூகத்தில் பிறந்த ரோஹித், பல தடைகளைத் தாண்டி அறிவியலில் ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளும் நிலைக்கு உயர்ந்தார். அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். முசாபர் நகரில் நடந்த வன்முறை பற்றிய விளக்கப்படம் திரையிடல், அப்சல் குரு தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் ஈடுபட்டபோது, அவர்களுக்கும் சங்பரிவார் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றி ஏ.பி.வி.பி அமைப்பினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும், அதைத் தொடர்ந்து ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ரோஹித் வெமுலா உட்பட அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் விடுதியில் இருந்து வெளியேற்றியது. அவர்கள், பல்கலைக்கழக வளாகத்திலேயே கூடாரம் அமைத்துத் தங்கினர். நூலகம், உணவுக்கூடம், விடுதி என எங்கேயும் நடமாட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நவீன தீண்டாமையால் மனம் வெதும்பிய ரோஹித், கடந்த 17-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்