“தி.மு.க. ஆட்சியில்கூட நாங்கள் உள்ளே போகவில்லை!”

அமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் மதுரை அ.தி.மு.க.!

மைச்சர் செல்லூர் ராஜுவை வைத்து சினிமாவே எடுக்கலாம். அந்த அளவுக்கு திடுக்கிடும் காட்சிகள் மதுரையில் நடக்கின்றன.

மதுரையில் அமைச்சர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவிடாமல் அமைச்சர் செல்லூர் ராஜுவே தடுப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மதுரை அலுவலகத்திலும் அ.தி.மு.க அலுவலகத்திலும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற விசாரணையில் கடந்த ஒரு வாரமாக மதுரை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கைத் திசை திருப்பும் விதமாகக் கட்சியில் தனக்கு எதிராகச் செயல்படும் ‘கிரம்மர்’ சுரேஷ், பசும்பொன் பாண்டியன், நாகராஜ், கார்மேகம், ரத்தினசாமி, சிங்கராசு மற்றும் வீராயி என்கிற அ.தி.மு.க பெண் நிர்வாகி உள்பட 416 கட்சிக்காரர்கள் பட்டியலை அமைச்சர் தரப்பினர் போலீஸாரிடம் கொடுத்தார் களாம். அவர்களிடமும், மூன்று தி.மு.க-வினரிடமும் போலீஸ் விசாரித்து இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்