பெரியோர்களே... தாய்மார்களே! - 57

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

கோயிலைச் சுற்றி வளர்ந்தது மதுரை. கோட்டையைச் சுற்றி வளர்ந்தது சென்னை.

வாணிகம் செய்ய வந்தவர்கள் கோட்டை அமைத்ததே வர்த்தக நோக்கத்துக்காகத்தான். அதனால்தான் படை வீரர்களுக்குக் கோட்டைக்கு வெளியே வீடுகள் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி, வர்த்தகர்களுக்குக் கோட்டைக்கு உள்ளே வீடுகள் ஒதுக்கியது. அதுவும் ஆங்கில வர்த்தகர், இந்திய வர்த்தகர் என்ற வேறுபாடு பார்க்கவில்லை. ‘நாய் விற்ற காசு குறைக்காது’ என்பது புதிய பொருளாதாரக் கொள்கைக்கு 400 ஆண்டுகளுக்கு முந்தைய சூத்திரங்களில் ஒன்று.

சேஷாத்திரி நாயக்கர், பேரி திம்மன், காசி வீரண்ணா, தம்புச் செட்டி, லிங்கிச் செட்டி போன்ற பெரு வணிகர்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவிசெய்யும் வர்த்தர்களாக நியமித்து அவர்களுக்குக் கோட்டைக்கு உள்ளே வீடும், கோட்டைக்குப் பக்கத்திலேயே வர்த்தக நிறுவனத்தையும் நடத்த அனுமதி தந்து இருந்தார்கள். சென்னையில் கொத்தவால் சாவடி, தங்கசாலை தெரு, மண்ணடி தெரு, லிங்கிச் செட்டி தெரு, தம்புச் செட்டி தெரு, ஒற்றைவாடை தெரு போன்றவை வர்த்தகக் குவி மையங்களாக இருந்தன.

பருத்தியும் பருத்தித் துணியும் சாயம் போகாத சாயமும்தான் சென்னையின் தனிச் சிறப்பாக அந்தக் காலத்தில் இருந்தன. இதுவே, சென்னையைத் தொழில் நகராக மாற்றியது. கப்பலில் தங்கமும் ஸ்பானிஷ் டாலரும் வந்து இறங்கின. இங்கிருந்து பருத்தியும் மிளகும் ஏறிப்போயின. இந்த ஏற்றுமதி வர்த்தகத்தைத் திறம்பட நடத்தியவர்கள் பேரி நிறுவனமும் பின்னி நிறுவனமும். பேரி நிறுவனத்தின் அடையாளமாக ‘பாரீஸ் கார்னர்’ எனப்படும் பாரிமுனையும், பின்னி நிறுவனத்தின் அடையாளமாக பெரம்பூர் பின்னி ஆலை கட்டடமும் இன்னமும் இருக்கின்றன. வேதாளம் படத்தில் அஜித் ஆடும், ‘ஆளும்மா டோலும்மா’ பாட்டு எடுக்கப்பட்டது இந்த பின்னி ஆலையில்தான்.

சாந்தோமில் தோல் பதனிடும் தொழிற்சாலையை தாமஸ் பேரி உருவாக்கினார். ‘சென்னையின் முதல் தொழிற்சாலை’ எனப்படும் இதில் தயாரான ஷுவும், செருப்பும் உலகம் முழுவதும் போனது. இவரிடம் ஏராளமான கப்பல்கள் இருந்தன. இதைவைத்து ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்தார். சென்னை மாகாணத்தில் சர்க்கரை உற்பத்தியைத் தொடங்கியவரும் இவரே. கர்நாடகா நவாப்பிடம் இருந்து இவர் வாங்கிய இடம்தான் இன்று பாரிமுனையில் இருக்கிறது. 37 ஆண்டு காலம் சென்னையில் இருந்த இவர், தன் மகனோடு கடலூர் போனபோது இறந்து போனார். அவரது சமாதி கடலூரில் இருக்கிறது. சென்னையைத் தொழில் நகரம் ஆக்கிய முதல் செங்கல், தாமஸ் பேரியினுடையது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்