இடஒதுக்கீட்டை இழிவுபடுத்தினாரா விஜய் ஆண்டனி?

‘பீப்’ பாடல் சர்ச்சை அடங்குவதற்குள், மற்றொரு பாடலும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘பிச்சைக்காரன்’ என்ற திரைப்படத்தின் ப்ரமோ பாடல், யூ ட்யூப்-ல் வெளியானது. ‘பாழாப்போன உலகத்திலே காசு பணம் பெருசு’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில், ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்; தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. அதுதான் சர்ச்சையை விதைத்துள்ளது.

“இந்த வரிகள் இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கிப் படித்த டாக்டர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது” என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் உட்பட பல டாக்டர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்குவதுடன், விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்