‘மூளை’ இல்லாத பல்கலைக்கழகங்கள்!

துணைவேந்தர் நியமனங்களில் பணமும் சாதியும்...

றிவார்ந்த சமூகத்தை உருவாக்க அடிப்படைத் தேவை, கல்வி. தரமான கல்வியை வடிவமைத்துக் கொடுப்பவை பல்கலைக்கழகங்கள். ஒரு பல்கலைக்கழகத்தின் மூளையாக விளங்குபவர் துணைவேந்தர். இன்றைக்கு, தமிழகத்தில் உள்ள 8 பல்கலைக்கழகங்கள் ‘மூளை’ இல்லாமல், மன்னிக்கவும்... துணைவேந்தர்கள் இல்லாமல் தவிக்கின்றன.

ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக் கழகங்கள் தலைமை இல்லாமல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதற்கு, என்ன காரணம்? மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு இணை அமைப்பாளர் பேராசிரியர் விஜயகுமாரிடம் பேசினோம்.

‘‘பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தீர்மானிக்கப்படவும், தாமதமாகவும் மூன்று முக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று, ஆளும் கட்சியின் ஆதரவு. இரண்டு, சாதி. மூன்று, பணம். இந்த கேடுகெட்ட நிலைக்கு, துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததே காரணம். ஆளும் கட்சியில் அதிகாரம் கொண்டவர்களுக்கு நெருக்கமானவர்களால் மட்டுமே துணைவேந்தர் நாற்காலியில் அமர முடியும். கடந்த ஆட்சிக்கு கற்பக குமாரவேல் உதாரணம் என்றால், இந்த ஆட்சிக்கு கல்யாணி மதிவாணன் உதாரணம். தங்களின் ‘மாமியார் வீட்டு சீதனத்தைப்போல’, துணைவேந்தர் பதவியை ஆளும் கட்சியினர் அள்ளிக் கொடுக்கின்றனர்.

அடுத்தது, சாதி. ஒரு பல்கலைக்கழகத்தில், குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பார்கள். அந்தக் கணக்கை சரிக்கட்ட மற்றொரு பல்கலைக்கழகத்தில் அந்தப் பகுதியில் செல்வாக்கான இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பார்கள். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மறந்தும்கூட தலித் பிரிவைச் சேர்ந்த ஒரு பேராசிரியரை துணைவேந்தர் பதவிக்கு கொண்டுவர மாட்டார்கள். தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில், தலித் ஒருவர் துணைவேந்தர் பதவிக்கு வருவது அரிதிலும் அரிது. மூன்றாவது பணம். கடந்த ஆண்டு துணைவேந்தர் பதவி மூன்றில் இருந்து ஐந்துவரை ஏலம் போனது. இந்த முறை ஐந்தில் இருந்து எட்டு வரை ஏலம் போகலாம் என்று சொல்லப்படுகிறது. இத்தனை கோடிகளைக் கொடுத்து துணைவேந்தராக வருபவர், தன் மூன்றாண்டு பதவிக் காலத்துக்குள், எத்தனை மடங்காக அந்தப் பணத்தைத் திருப்பி எடுப்பது என்பதில் மட்டும்தான் குறியாக இருப்பார். பல்கலைக்கழகத்தின் நலன், கல்வியின் தரம், மாணவர்களின் நிலை என்பது பற்றியெல்லாம் அவரால் சிந்திக்கவே முடியாது. அதனால்தான், துணைவேந்தர்கள் ஒவ்வொரு ஆசிரியர் நியமனத்துக்கும் ரகசிய விலை வைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்