கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘தி.மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும். மீண்டும் அவர்கள் உயிர்பெற அனுமதிக்கக் கூடாது’ என்கிறாரே, ‘துக்ளக்’ சோ?


 அது அவரது கருத்து. அ.தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைச் சுற்றி வளைத்து இப்படிச் சொல்லி இருக்கிறார். அதே கூட்டத்தில்தான் ஆளும் கட்சியை விமர்சித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா பேசினார். அவரது பேச்சுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பழ.கருப்பையாவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தபிறகும் கூட்டத்தினர் அவரைப் பேச விடுங்கள் என்று சத்தம் போட்டதுதான் சோ, சொன்னதற்கான எதிர்வினை.

திருலோக்கி க.தமிழ்மணி, நெடுந்திடல்.

 மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மூத்த தலைவர் நல்லகண்ணுவை அறிவித்தால், அந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்லபெயர் உண்டாகுமே?


 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஒருமுறை இதனைச் சொன்னார். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் தலைவர்களே இதை வழிமொழியவில்லை. எனவே, நல்லகண்ணுவை அறிவிக்கும் சூழ்நிலை இருப்பது மாதிரி தெரியவில்லை.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைவிட சுமார் 54 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றுப்போனார். நல்லகண்ணுவுக்கு ஓட்டு போடாத மக்கள் நல்லகண்ணு பெயரை அறிவித்தால், நல்லதாகச் சொல்வார்களா? அந்த அளவுக்கு நாடு மாறிவிட்டதா?

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

 தமிழக மக்களின் உணர்வுகளுக்குக்கூட உச்ச நீதிமன்றம் மதிப்பு அளிக்கவில்லையே?


 சட்டம் என்பது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் உணர்வுகள் முழுமையாக உச்ச நீதிமன்றத்தில் சொல்லப்படவில்லை என்பதே உண்மை. பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் கவனம் செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்​கட்டு வழக்கில் கவனம் செலுத்தி அதில் தனது அரசின், தமிழ் மக்களின் விருப்பதை வரிசைப்படுத்தி வாதங்களை வைக்கவில்லை. அதுதான் தவறானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்