“ஆளே இல்லாத கட்சியில் ஆட்டம்போடுகிறார்!”

இளங்கோவன் மீது விஜயதரணி பாய்ச்சல்

கிளா காங்கிரஸ் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்ட விஜயதரணி எம்.எல்.ஏ., சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், அ.தி.மு.க-வுக்குத் தாவலாம் என்ற பேச்சு உலாவும் நிலையில் விஜயதரணியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீரென்று நீங்கள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம்?”

“இளங்கோவன்தான் காரணம். அவர், என்னை மிகவும் தரக்குறைவாகப் பேசிவந்தார். மேலிடத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. என் பொறுப்பை உணர்ந்து பொறுமையோடு பணியாற்றினேன். ஆனாலும், தொடர்ந்து என்னைச் சீண்டினார். ‘குறைக்கிற நாய்’ என்றார். என் வாயால் சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்தார்.  என்னை இழிவாகப் பேசினார். ‘எம்.எல்.ஏ என்றால் பெரிய .....?’ என்று கட்சிக் கூட்டத்திலேயே சொன்னார். என் தாயார் ஒரு மருத்துவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். இளங்கோவன் பேச்சால் மனம்நொந்து இருந்தேன். பாதிக்கப்பட்ட எனக்கு ஆதரவாக இல்லாமல், இளங்கோவனின் பேச்சைக் கேட்டு என்னை நீக்கி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஒரு பாரம்பர்யமான கட்சி. காங்கிரஸ் வரலாற்றில் எத்தனையோ பெண்கள் பல சாதனைகளைப் படைத்து இருக்கிறார்கள். அத்தகைய கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்களையே கேவலப்படுத்துகிறார் இளங்கோவன். பெண் தலைவர்களை தரக்குறைவாகப் பேசுகிறார். இப்படிப்பட்ட தவறான ஒரு நபரை தலைவராக வைத்துக்கொண்டு, அவரைக் காப்பாற்ற நினைக்கிறது காங்கிரஸ் மேலிடம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்