“ஏரிகாத்த அம்மன் இங்கே... ஏரி எங்கே?”

அன்புமணியின் அடுத்த ரவுண்ட்!

“மாற்றம் நீங்கள் தாருங்கள்... சென்னையை நான் மாற்றிக் காட்டுகிறேன்” என்ற முழக்கத்தோடு ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை சூளைமேட்டில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். டி-சர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து ‘ஸ்மார்ட் லுக்’கில் வந்திருந்த அவர், சூளைமேடு காந்தி சிலை அருகே தெருவில் மக்களைச் சந்தித்துப் பேசினார். ‘நாம் விரும்பும் சென்னை’ பிரசாரத்தின் துண்டுப் பிரசுரங்களைக் கடைகளுக்குச் சென்று கொடுத்துவிட்டு, “இது தேர்தல் பிரசாரம் அல்ல... நமது சென்னை எப்படி இருக்கணும்னு உங்களுக்கும் ஓர் ஆசை இருக்கும். அதே ஆசை எனக்கும் இருக்கு. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கேன். சென்னை எப்படி இருக்கணும்னு நீங்க ஆசைப்படுகிறீர்கள்’’ என்று மக்களிடம் கேட்டார். மளிகைக் கடை வாசலில் நின்ற மூதாட்டியிடம் துண்டுபிரசுரத்தை நீட்ட, அந்த மூதாட்டிக்கு இவர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. “நான் அன்புமணி ராமதாஸ், எம்.பி-யாக இருக்கேன். உங்ககிட்ட ஓட்டு கேட்டு நான் வரலை. நம்ம சென்னை இப்ப இப்படிச் சீரழிந்துபோச்சு, அதை மாத்தணும். சென்னை எப்படி இருக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்க?” என்று கேட்டதும், அந்த மூதாட்டி “நான் 58 வருடங்களுக்கு முன் சென்னை வந்தப்போ இருந்த சென்னைதான் இப்போ மீண்டும் வேணும்” என வாஞ்சையோடு பதில் அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்