பெரியோர்களே... தாய்மார்களே! - 58

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ந்தியாவைப் பொறுத்தவரை வரலாறு என்பது எப்போதுமே அரைகுறைப் பிரசவமாகவே இருந்துள்ளது. வரலாற்றைக் கொண்டுவந்து மக்கள் முன் விரிப்பதிலும் விவரிப்பதிலும் மேற்கத்திய நாடுகள் காட்டிய ஆர்வத்தில் கால்பங்கைக்கூட இந்திய அறிவுஜீவிகள் செய்யவில்லை. அதனால்தான் பிற்காலத்தில் யாரெல்லாம் பதவியைப் பிடித்தார்களோ, அவர்களுக்குச் சாதகமாக வரலாற்றை வடித்துக்கொண்டார்கள்.

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை காங்கிரஸ் நடத்தியது, 1947-ல் வெள்ளையன் வெளியே போய்விட்டான்... என்று இரண்டு வரிகளில் இந்திய வரலாற்றை ஆனந்த பவனத்தின் அறைகளில் மறைத்துவிடுகிறார்கள். ஆனால் உண்மை, பங்களாவுக்கு வெளியே பரந்துபட்டுக் கிடக்கிறது.

இந்திய விடுதலையை மிகத் துரிதம் ஆக்க முக்கியமான இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா?  முதலாவது காரணம், இந்தியத் தொழிலாளி வர்க்கம். இரண்டாவது காரணம், இரண்டாம் உலகப் போர்.

இந்தியப் பாடப் புத்தகங்களால் மட்டுமல்ல, பெரும் பான்மை வரலாற்றுப் புத்தகங்களாலும் மறைக்கப்பட்ட வரலாறு இது. உழைப்புச் சக்திகளான தொழிலாளர்களும், விவசாயிகளும் பங்கெடுக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பங்கெடுத்தால் வெற்றிபெறாமல் போகாது என்பதற்கும் இந்திய விடுதலையே உதாரணம். மேலும், இன்று மட்டுமல்ல... எல்லாக் காலத்திலும் எந்தச் சிறு இயக்கமும் போராட்டமும் குறிப்பிட்ட ஊரை, நாட்டைச் சார்ந்ததாக மட்டும் இருந்தது இல்லை. அது குறிப்பிட்ட நாட்டுக்குள் நடந்தாலும் அது நாட்டு எல்லைகளைக் கடந்து பல்வேறு நாடுகளைப் பாதிக்கும் என்பதையும் இந்திய விடுதலைப் போராட்டம் நிரூபித்தது. இது உண்மைதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் கூப்பிடு தூரத்தில் நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழினத்தை ஓர் ஈனக்கூட்டத்திடம் காவு கொடுத்தோம். சர்வதேச சக்திகளே எல்லாப் பிரச்னைகளையும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நிர்ணயிக்கின்றன. தொழிலாளர் எழுச்சி, சர்வதேச சக்திகளின் பின்புலம் ஆகிய இரண்டு காரணங்களையும் மக்கள் உணர்ந்துவிடக் கூடாது என்று மறைப்பதில் அதிகார வர்க்கம் அக்கறை செலுத்தியதால்தான் வரலாற்றை மறைப்பதில் மும்முரமாக இருந்தது. ஆனால், ரத்தமும் வியர்வையும் பேனா மையைவிட வலிமையானது. அந்த உண்மைகள் எப்போதாவது ஊருக்குத் தெரிந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்