நந்தனின் பிள்ளைகள்

பறையர் வரலாறு [1850 - 1956]ராஜ்சேகர் பாசு, தமிழில்:அ.குமரேசன்

மிழக அறிவு ஜீவிகள் இதுவரை செய்யத் தவறிய ஆய்வு ஒன்றை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்சேகர் பாசு செய்துள்ளார். அதற்காகவே அவருக்கு தலைவணங் கியாக வேண்டும். இதேபோன்ற ஆய்வு தமிழக அறிவு ஜீவிகளால் செய்யப்பட்டு இருந்தால் அதில் ஓரவஞ்சகமும், ஒற்றைத் தன்மையும் துருத்திக் கொண்டு இருந்திருக்கும். வெளியில் இருந்து ஒருவர் செய்த ஆய்வு என்பதால், அதுவும் தவிர்க்கப்பட்டு உள்ளது. அது, இந்த ஆய்வின் இன்னொரு சிறப்பு. ஒரு நூற்றாண்டு (1850-1956) காலத்தை விவரிக்கும் பரந்துபட்ட தளத்தை எடுத்துக்கொண்டதால் காலனி ஆதிக்கம் - சுதந்திர இந்தியா என்ற இருவேறு பார்வைகளை ஒருசேர உணரவும் முடிகிறது. இதுவே இந்தப் புத்தகத்தின் கூடுதலான முதன்மை பலம்.

‘இரண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளின், சமூக கலாசார மாற்றம் தென் இந்தியாவில் பறையர்கள், புலையர்கள் வரலாறு 1850-1956’ - என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜ்சேகர் பாசு, கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பித்த முனைவர் பட்ட

ஆய் வேட்டின் திருத்தப்பட்ட வடிவம்தான் இந்தப் புத்தகம்.

மக்களை ஒருங்கிணைத்ததில் வெற்றி பெற்ற பகுதியாகத் தென்னிந்தியாவை அடையாளப்படுத்தும் இவர், திடீர் பயணமாக இங்கு வந்ததன் மூலமாக தமிழகத்தைப் படிக்கத் தொடங்குகிறார். விவசாயத்தோடு இணைந்த அடிமைத் தனத்தில் வாழ்க்கையைப்

பறி கொடுக்கும் அந்தச் சமூக மக்கள் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் மயப்படுத்தப் பட்ட சமூகமாக மாறுவதுவரை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார் ராஜ்சேகர் பாசு.

1850-களில் இந்தப் புத்தகம் தொடங்குவதற்கான காரணம், கிறிஸ்தவ மிஷனரி இயக்கங்கள் சாதிப் பிரச்னையை இந்த ஆண்டில்தான் எதிர்கொண்டன என்றும், அந்தச் சமூக மக்களும் அந்த ஆண்டில் இருந்து தான் தங்களது அடையாளத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்கள் என்றும் சொல்கிறார்.

கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடு, அந்தச் சமூக மக்களின் இடப் பெயர்ச்சி, அது சமூகத்தில் ஏற்படுத்திய உயர்வு, பிராமணர் அல்லாதார் இயக்கம், நீதிக் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் - ஆகிய இயக்கங்கள் இந்தச் சமூக மக்களுக்கு ஏற்படுத்திய சாதகங்களும் பாதகங்களும், வெகு மக்கள் அரசியலுக்குள் பட்டியலின அரசியல் முரண்பட்டும் இணங்கியும் போன சூழ்நிலைகள் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் சொல்லப் படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்