தலைநகர்... கொலை நகர்!

குற்றம்

லைநகர் சென்னையில், தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைகளால் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து ஜூன் 23-ம் தேதி பேசிய முதல்வர் ஜெயலலிதா, “தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது. சட்டம் - ஒழுங்கைப் பாதிக்கச் செய்யும் நிகழ்வுகளிலும் குற்றத்தடுப்பு, புலனாய்வு ஆகிய காவல் பணிகளிலும் காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் பொது அமைதி பாதுகாக்கப்படுகிறது.... எனது தலைமையின்கீழ், காவல் துறையினரின் சிறப்பான பணிகளின் காரணமாக, தமிழ்நாட்டில் குற்ற நிகழ்வுகள் குறைந்துவருகின்றன. தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று பேசினார்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்த தினத்தில்தான் ஒரு தாய், மூன்று மகள்கள் என நான்கு பேர் கொலை கண்டறியப்பட்டு அதுதொடர்பான தகவல்கள் சென்னையை உலுக்கின. முதல்வர் பேசியதற்கு முந்தின நாளான ஜூன் 22-ம் தேதிதான், வியாசர்பாடியில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். முதல்வர் பேசியதற்கு மறுநாளான ஜூன் 24-ம் தேதிதான், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து ஒருநாள் இடைவெளியில், ஜூன் 26-ம் தேதி சென்னையின் முக்கியப் பகுதியான நந்தனம் அண்ணாசாலையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்